உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவிடாய் ஒருமையியக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று பெண்களின் மாதவிடாய் சுழற்சி ஒருங்குவதைக்காட்டும் பின்னல் வலை. இது மாதவிடாய் ஒருமையியக்கத்தைப்பற்றிய யோழுங்கு பழங்குடிகளின் பழங்கதையைக் காட்டுகிறது.[1]

மேக்கிளிண்டாக்கு விளைவு (McClintock effect) என்றும் அழைக்கப்படும் மாதவிடாய் ஒருமையியக்கம் (Menstrual synchrony)[2] ஒன்றாக ஒரே இடத்தில் வசிக்கத் தொடங்கும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடங்கும் நாள்கள் முன்பைக்காட்டிலும் நெருங்கிவருவதைக் குறிக்கும். "காட்டாக, ஏழு பெண் உயிர்காவலர்களின் மாதவிடாய்த்தொடக்க நாள்கள் தள்ளித்தள்ளி இருந்தன. ஆனால், அவர்கள் ஒன்றாகவிருந்து பணியாற்றத்தொடங்கிய 3 மாதங்களில் ஏழுபேரின் மாதவிலக்கு நாள்களும் 4 நாள் இடைவெளிக்குள்ளாக மாறிவிட்டன."[3]

இவ்விளைவை மார்த்தா மேக்கிளிண்டாக்கு எனும் ஆய்வாளர் நேச்சர் ஆய்விதழில் 1971-ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்தார்..[3] இவ்வாறான ஒருங்குதலுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.[4]

பின்னாளில் மேலும் பல ஆய்வுக்கட்டுரைகள் மேக்கிளிண்டாக்கு உள்ளிட்ட பலரும் நிகழ்த்திய ஆய்வுகளில் முறைமைப்பிழைகள் இருப்பதாகச் சுட்டின. வேறுபல ஆய்வுகளில் ஒருங்குதல் எதுவும் தென்படவில்லை. மாதவிடாய் ஒருங்குதல் என்ற கருத்தே பிழையானது என்றும் ஒரு ஆய்வுக்கட்டுரை முடிவுக்கு வந்துள்ளது.[4]

மார்த்தா மேக்கிளிண்டாக்கின் முதல் ஆய்வு[தொகு]

மார்த்தா மேக்கிளிண்டாக்கு முதன்முதலாக விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களில் தென்படும் மாதவிடாய் ஒருமையியக்கத்தை ஆய்வுசெய்து வெளியிட்டார்.

முன்வைக்கப்படும் காரணிகள்[தொகு]

மேக்கிளிண்டாக்கு மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் பாலுணர்வு ஈர்ப்புச் சுரப்புகளின் விளைவாக இவ்வாறு ஒருங்கக்கூடுமென கருதினார்.[3][5] அதைத்தவிர வேறு வழிமுறைகளும் இருக்கலாமென முன்வைத்துள்ளனர். நிலவு தேய்ந்தும் வளர்ந்தும் மாறும் சுழற்சியையொட்டி மாதவிடாயும் ஒருங்குமென்றும் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[4] நிலவுச்சுழற்சியினாலும் சுரப்புகளினாலும் இது நிகழும் என்பதற்கு வலுவான சான்றுகள் இல்லை.

மேக்கிளிண்டாக்கின் முடிவுகளின் மீளாய்வு[தொகு]

சில தொடக்கநிலை ஆய்வுகள் பதிவானபிறகு பல ஆய்வாளர்களும் இவ்வாறான மாதவிடாய் ஒருங்குதலைக்காண முடியவில்லை என்ற முடிவை எட்டினர்.[6][7] அதன்பின்னர் முந்தைய ஆய்வுகளில் தென்பட்டதாகக் கூறப்பட்ட ஒருமைப்பாடு அவ்வாய்வுகள் நிகழ்த்திய முறையிலிருந்த சாய்வுகளினாலேயே உருவான தோற்றம் எனவும் பிந்தைய ஆய்வுக்கட்டுரைகள் தெரிவித்தன.[8][9][10][11] அந்த சாய்வுகளை அகற்றி நிகழ்த்திய ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஒருமையியக்கம் தென்படவில்லை.[8][12][13]

கலைச்சொல்லாட்சி[தொகு]

ஒருமையியக்கம் எனும் சொல்லாட்சியே பிழையான தோற்றத்தைத் தரவல்லது. ஏனெனில் எந்த ஆய்விலும் ஒரே நேரத்தில் மாதவிடாய் தோன்றுவதாகவோ, ஒரே இசைவில் நிகழ்வதாகவோ காட்டவில்லை. மாறாக அந்தக்கலைச்சொல்லை மாதவிடாய் சுழற்சிகள் நாளடைவில் அண்மிப்பதைக்குறிக்கவே பயன்படுத்தினர்.[8]

அண்மைய கருத்து[தொகு]

அண்மைய மீளாய்வு ஒன்றில் "மாதவிடாய் ஒருமையியக்கம் நிகழ்வதை அறுதியுடன் காட்டும் பரவலான தரவுகள் இல்லாமையால் அக்கருதுகோளை ஐயத்துடன்தான் அணுகவேண்டும்" என்றுள்ளனர்.[4] மாதவிடாய்கள் ஒருங்குவதாகத் தோன்றுவது தற்செயலாக மாதவிடாய் சுழற்சிகள் நெருங்கவும் விலகவும் செய்யுமென்ற கணித அடிப்படையினால் இருக்கக்கூடும்.[12] தவிர தற்செயலாகவே மாதவிடாய் சுழற்சிகள் நெருங்கி அமைவதற்கான நிகழ்தகவு மிகுதி.[8]

படிவளர்ச்சிப் பார்வை[தொகு]

மாதவிடாய் ஒருங்குதல் ஏதேனும் படிவளர்ச்சிக்காரணியங்களுக்கான தகவமைப்பாக இருக்குமா என்பதுபற்றி ஆய்வர் மாறுபடுகிறார்கள்.[4][5][8] மேக்கிளிண்டாக்கு இவ்விளைவு தகவமைப்பாக இருக்காது, எவ்வித உயிரியற்பண்போ பணியோ இல்லாதவொன்றாக இருக்கக்கூடும் எனக்கருதினார்.[5] ஏதேனும் தகவமைப்பாக இருக்கலாம் என்பவர்கள் ஒன்றாக ஈனுதல் விளைவின் ஒரு பகுதியாக இது இருக்கலாமெனக் கருதுகிறார்கள். அவ்வகையான ஈனுதல் ஒருமைப்பாடு பல உயிரினங்களில் சூழலியலாளர்களால் அறிப்பட்டவொன்று. பருவகாலத்தையொட்டியோ, அலை நிலையின் அடிப்படையிலோ நிலவுச்சுழற்சிநிலையினைப் பொறுத்தோ அமையும் ஈனுகையினால் பெண் உயிர்கள் பல ஆண் உயிர்களின் மரபுத்தோன்றல்களைப்பெற ஏதுவாகிறது.

அதேவேளை, பல பெண் உயிர்கள் ஒன்றாய் ஈனுவதற்குத் தயாராகும்போது உயர் தகவமைப்பைக்கொண்ட ஆண்களைப்பெறுவதில் போட்டி ஏற்பட்டு, அத்துணை தகவமைப்பைக் கொண்டிராத ஆண் உயிர்களுடனும் இணைசேரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம். அவ்வாறான நேரங்களில் ஒன்றாய் ஈனுதல் படிவளர்ச்சியில் அற்றுப்போகவேண்டும்.[14]

மாந்தரல்லாத விலங்குகளில்[தொகு]

நார்வே பழுப்பு எலிகள்,[15] வெள்ளெலிகள்,[16] சிம்பன்சிகள்,[17] பொன்னிற வாலுடைய தாமரின் குரங்குகள்[18] முதலிய பல விலங்குகளில் முறையே மாதவிடாய்ச்சுழற்சியும் சினைப்பருவச்சுழற்சியும் ஒருங்குவதாக அறிந்துள்ளனர். ஆனால் மாந்தரில் நடத்திய ஆய்வுகளைப்போலவே இவ்விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலும் முறைசார் குறைகள் இருப்பதாகச் சுட்டப்பட்டுள்ளது.[19][20][21] பின்னர் நிகழ்த்திய ஆய்வுகள் சிலவற்றில் இவ்விளைவுகள் தென்படவில்லை.[22][23][24][25][26]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. Knight, C. (1995). Blood Relations: Menstruation and the Origins of Culture. New Haven and London: Yale University Press. p. 445.
 2. Gosline, Anna (December 7, 2007). "Do Women Who Live Together Menstruate Together?". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
 3. 3.0 3.1 3.2 எஆசு:10.1038/229244a0
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 Harris, Amy L.; Vitzthum, Virginia J. (2013). "Darwin's Legacy: An Evolutionary View of Women's Reproductive and Sexual Functioning". Journal of Sex Research 50 (3–4): 207–46. doi:10.1080/00224499.2012.763085. பப்மெட்:23480070. 
 5. 5.0 5.1 5.2 McClintock, MK (1998). "Whither menstrual synchrony?". Annual review of sex research 9: 77–95. பப்மெட்:10349026. 
 6. Wilson, H; Kiefhaber, S; Gravel, V (1991). "Two studies of menstrual synchrony: Negative results". Psychoneuroendocrinology 16 (4): 353–9. doi:10.1016/0306-4530(91)90021-K. பப்மெட்:1745701. https://archive.org/details/sim_psychoneuroendocrinology_1991_16_4/page/353. 
 7. Trevathan, Wenda R.; Burleson, Mary H.; Gregory, W.Larry (1993). "No evidence for menstrual synchrony in lesbian couples". Psychoneuroendocrinology 18 (5–6): 425–35. doi:10.1016/0306-4530(93)90017-F. பப்மெட்:8416051. 
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 Strassmann, B. I. (1999). "Menstrual synchrony pheromones: Cause for doubt". Human Reproduction 14 (3): 579–80. doi:10.1093/humrep/14.3.579. பப்மெட்:10221677. https://archive.org/details/sim_human-reproduction_1999-03_14_3/page/579. 
 9. Wilson, H (1992). "A critical review of menstrual synchrony research". Psychoneuroendocrinology 17 (6): 565–91. doi:10.1016/0306-4530(92)90016-Z. பப்மெட்:1287678. https://archive.org/details/sim_psychoneuroendocrinology_1992-11_17_6/page/565. 
 10. Schank, Jeffrey C (2000). "Menstrual-cycle variability and measurement: Further cause for doubt". Psychoneuroendocrinology 25 (8): 837–47. doi:10.1016/S0306-4530(00)00029-9. பப்மெட்:10996477. https://archive.org/details/sim_psychoneuroendocrinology_2000-11_25_8/page/837. 
 11. Schank, Jeffrey C. (2001). "Menstrual-cycle synchrony: Problems and new directions for research". Journal of Comparative Psychology 115 (1): 3–15. doi:10.1037/0735-7036.115.1.3. பப்மெட்:11334217. 
 12. 12.0 12.1 Yang, Zhengwei; Schank, Jeffrey C. (2006). "Women do not synchronize their menstrual cycles". Human Nature 17 (4): 433–47. doi:10.1007/s12110-006-1005-z. 
 13. Ziomkiewicz, Anna (2006). "Menstrual synchrony: Fact or artifact?". Human Nature 17 (4): 419–32. doi:10.1007/s12110-006-1004-0. 
 14. Schank, Jeffrey C, Nonlinear Dynamics, Psychology, and Life Sciences [2004, 8(2):147-176
 15. McClintock, M (1978). "Estrous synchrony and its mediation by Airborne chemical communication (Rattus norvegicus)". Hormones and Behavior 10 (3): 264–75. doi:10.1016/0018-506X(78)90071-5. பப்மெட்:568596. 
 16. Handelmann, Gail; Ravizza, Richard; Ray, William J (1980). "Social dominance determines estrous entrainment among female hamsters". Hormones and Behavior 14 (2): 107–15. doi:10.1016/0018-506X(80)90002-1. பப்மெட்:7191403. 
 17. Wallis, Janette (1985). "Synchrony of estrous swelling in captive group-living chimpanzees (Pan troglodytes)". International Journal of Primatology 6 (3): 335–50. doi:10.1007/BF02745505. 
 18. French, Jeffrey A.; Stribley, Judith A. (1987). "Synchronization of ovarian cycles within and between social groups in golden lion tamarins (Leontopithecus rosalia)". American Journal of Primatology 12 (4): 469–78. doi:10.1002/ajp.1350120403. 
 19. Schank, Jeffrey C (2001). "Do Norway rats (Rattus norvegicus) synchronize their estrous cycles?". Physiology & Behavior 72: 129. doi:10.1016/S0031-9384(00)00395-4. https://archive.org/details/sim_physiology-behavior_2001-01_72_1-2/page/129. 
 20. Schank, Jeffrey C. (2000). "Can Pseudo Entrainment Explain the Synchrony of Estrous Cycles among Golden Hamsters (Mesocricetus auratus)?". Hormones and Behavior 38 (2): 94–101. doi:10.1006/hbeh.2000.1603. பப்மெட்:10964523. 
 21. Schank, Jeffrey C (2001). "Measurement and cycle variability: Reexamining the case for ovarian-cycle synchrony in primates". Behavioural Processes 56 (3): 131–146. doi:10.1016/S0376-6357(01)00194-2. பப்மெட்:11738507. 
 22. Schank, Jeffrey C. (2001). "Oestrous and birth synchrony in Norway rats, Rattus norvegicus". Animal Behaviour 62 (3): 409–75. doi:10.1006/anbe.2001.1757. 
 23. Gattermann, Rolf; Ulbrich, Karin; Weinandy, René (2002). "Asynchrony in the Estrous Cycles of Golden Hamsters (Mesocricetus auratus)". Hormones and Behavior 42 (1): 70–7. doi:10.1006/hbeh.2002.1800. பப்மெட்:12191649. 
 24. Matsumoto-Oda, Akiko; Kasuya, Eiiti (2005). "Proximity and estrous synchrony in Mahale chimpanzees". American Journal of Primatology 66 (2): 159–66. doi:10.1002/ajp.20135. பப்மெட்:15940707. 
 25. Matsumoto-Oda, Akiko; Hamai, Miya; Hayaki, Hitosige; Hosaka, Kazuhiko; Hunt, Kevin D.; Kasuya, Eiiti; Kawanaka, Kenji; Mitani, John C. et al. (2007). "Estrus cycle asynchrony in wild female chimpanzees, Pan troglodytes schweinfurthii". Behavioral Ecology and Sociobiology 61 (5): 661–8. doi:10.1007/s00265-006-0287-9. https://archive.org/details/sim_behavioral-ecology-and-sociobiology_2007-03_61_5/page/661. 
 26. Monfort, S. L.; Bush, M; Wildt, DE (1996). "Natural and induced ovarian synchrony in golden lion tamarins (Leontopithecus rosalia)". Biology of Reproduction 55 (4): 875–82. doi:10.1095/?biolreprod55.4.875. பப்மெட்:8879503.