மாதவிடாய் இன்மை
மாதவிடாய் இன்மை (Amenorrhea) என்பது பெண் பருவவயதை அடைந்த பின்னரும் மாதவிடாய் வராமல் இனப்பெருக்கத்திற்கு தகுதி அடைமுடியாமல் இருக்கும் நிலையை குறிக்கிறது[1]. மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். பெண்ணின் உடலியல் நிலைகளின் படி இந்த உடலியங்கியல் மாற்றமான மாதவிடாய் இன்மையால் கர்ப்பம் அடைதல் மற்றும் தாய்ப்பாலூட்டல் போன்ற தாய்மைப் பண்புகள் நிகழாது. இரண்டாவதாக கூறப்பட்ட பாலூட்ட இயலாமை கருத்தடை வடிவத்திற்கான ஒர் அடிப்படையையும் உருவாக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் கருவுறாமை நிலைக்கும் வழிவகுக்கிறது. இனப்பெருக்க காலத்திற்கு முன்னரான குழந்தைப் பருவத்திலும் முதுமைக்கு முன்னதான இறுதி மாதவிடாய்க்குப் பின்னரும் மாதவிடாய் இருக்காது.
மாதவிடாய் இன்மை என்பது பல முக்கிய சாத்தியமான காரணங்களைக் கொண்ட ஓர் அறிகுறியாகும்.[2]. ஒர் இளம் பெண்ணுக்கு 14 வயதிற்குள் இரண்டாம் நிலை பாலியல் குணாதிசயங்கள் தோன்றாமல் இருப்பது அல்லது 16 வயதிற்குள் மாதவிடாய் வராமலிருப்பது முதன்மை மாதவிடாய் இன்மை பிரச்சினை என வரையறுக்கப்படுகிறது. பிறவியிலேயே கருப்பை இல்லாமை, கருப்பை முட்டை செல்களைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ தவறுதல், உடலியல் வளர்ச்சியில் பருவமடைவது தாமதமாதல் போன்ற வளர்ச்சி சிக்கல்களால் மாதவிடாய் இன்மை ஏற்படலாம்.[3]. திடீரென மாதவிடாய் சுழற்சிகள் நின்றுபோவது மாதவிடாய் இன்மையின் இரண்டாம் நிலையாகும். பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதி மற்றும் பிட்யூட்டரி சுரப்பியின் இயக்குநீர் தொந்தரவுகளால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் முன்கூட்டிய இறுதி மாதவிடாய் அல்லது கருப்பையகத்தில் நார்திசுக்களின் பட்டைகளாக வடு உருவாகும்.
சாதாரணமான மாதவிடாய் சுழற்சி காலம் கொண்ட ஒரு பெண்ணிற்கு மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதிருப்பது அல்லது சில பெண்களுக்கு ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் சுழற்சி இல்லாதிருப்பது மாதவிடாய் இன்மையின் இரண்டாம் நிலை என வரையறுக்கப்படுகிறது.[4].
வகைப்பாடுகள்
[தொகு]மாதவிடாய் இன்மையை வகைப்படுத்த இரண்டு வழிகள் கடைபிடிக்கப்படுகின்றன. முதன்மை மாதவிடாய் இன்மை, இரண்டாம் மாதவிடாய் இன்மை அல்லது தனித்தனியான உறுப்பு செயல்பாடுகளின் அடிப்படை என்பன அவ்விரண்டு வழிகளாகும்.[5]. இரண்டாவது வகைபாடு நோயாளியின் உடலிலுள்ள சுரப்பிகளின் நிலையைப் பொருத்து அமைகிறது. நோயாளிக்கு இருக்கும் பாலின உறுப்புகள் மற்றும் கருமுட்டையை தூண்டும் இயக்குநீர் ஆகியனவற்றுக்கு இடையிலான தொடர்பு குறைபாட்டினால் அவருக்கு மாதவிடாய் இன்மை உண்டாகிறது.
- முதல் மற்றும் இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை பிரச்சினை என்பது 16 வயதிற்குள் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் வராமல் இருக்கும் நிலையாகும்[6]. 14 வயதிற்குள் அல்லது மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகம் வளர்தல் போன்ற இரண்டாம் நிலை பாலியல் குணாதிசயங்கள் தோன்றாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் எல்லாம் முதல்நிலை மாதவிடாய் இன்மை வகையைச் சேர்ந்தவையாகும்[7]. பெரும்பாலும் பெண் பருவ வயதை எட்டும் வரை பருவமடைதலுடன் தொடர்புடைய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் தேர்னர் கூட்டறிகுறி அல்லது தர்னர் நோய்த்தொகை பாதிப்பு அப்பெண்ணுக்கு இருக்கலாம்.
- இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை என்பது தொடங்கிவிட்ட வழக்கமான மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற முறையில் மூன்று மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் வரை மாதவிடாய் வராமல் இருக்கும் நிலையைக் குறிக்கிறது. . இந்த நிலை பொதுவாக 40 முதல் 55 வயதுடைய பெண்களுக்கு நிகழ்கிறது. மேலும் இளம் பருவ விளையாட்டு வீராங்கணைகளுக்கு வயது வித்தியாசம் ஏதுமின்றி மாதவிடாய் சுழற்சியில் இத்தகைய தொந்தரவுகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.[8] மாதவிடாய் நிறுத்ததினால் இடுப்பு மற்றும் முதுகெலும்புக்கு அருகில் முதுகில் கடுமையான வலி ஏற்படக்கூடும். இந்த வலிக்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் மாதவிடாய் இரத்தப்போக்கைத் தூண்டுவதற்கு கருப்பை இயக்குநீர் மருந்துகள் உண்டு. அவற்றை உட்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
பெயர்க்காரணம்
[தொகு]அமெனோரீகியா என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். a = எதிர்மறை, மாதம், ஓட்டம் என்ற பொருளைக் கொண்ட கிரேக்க மொழி உரிச்சொற்களிலிருந்து இச்சொல் பெறப்பட்டுள்ளது. சாதாரணமான மாத்ரநேர்மாறானது சாதாரண மாதவிடாய் காலத்திற்கு எதிர்மறையான நிலையை குறிக்கிறது என்ற பொருளில் இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. மாதவிடாய்க்கு எதிர்மறையான நிலை மாதவிடாய் இன்மையாகும்.
வரலாறு
[தொகு]தொழில்துறை புரட்சிக்கு முன்பான காலகட்ட சமூகங்களில் தற்போதைய தொழில்துறை சமூகங்களை சார்ந்த பெண்களை விட மாதவிடாய் பொதுவாக ஏற்பட்டது. மாதவிடாய் வரத்தொடங்கிய பிறகு ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையின் போது கர்ப்பம் அடைந்தால் மாதவிடாய் நிற்கும். அல்லது தேவைக்கேற்ப பராமரிப்பு மேற்கொண்டு வராமல் அடக்கப்பட்டது. மாதவிடாய் மற்றும் குறைந்த கருவுறுதல் வீதங்களின் குறைப்பு என்பது நவீனப் பெண்களின் பரிணாம வரலாற்றில் இயல்பான நிலைமைகள் மாற்றமடைந்து அடிக்கடி மாதவிடாய் காரணங்களால் ஏற்படுவதாகும் [9].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amenorrhea". nichd.nih.gov/ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
- ↑ "Who is at risk of amenorrhea?". nichd.nih.gov/. பார்க்கப்பட்ட நாள் 2018-11-08.
- ↑ "Absent menstrual periods - primary: MedlinePlus Medical Encyclopedia". medlineplus.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
- ↑ "Amenorrhea: evaluation and treatment". American Family Physician 73 (8): 1374–82. April 2006. பப்மெட்:16669559. http://www.aafp.org/afp/20060415/1374.html.
- ↑ Speroff L, Fritz MA (2005). Clinical Gynecologic Endocrinology and Infertility. Lippincott, Williams & Wilkins (2005). p. 403ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-4795-0.
- ↑ "Amenorrhea, Primary: eMedicine Obstetrics and Gynecology". Archived from the original on 29 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-01-16.
- ↑ Speroff, Leon; Glass, Robert H.; Kase, Nathan G. (1 June 1999). Clinical gynecologic endocrinology and infertility. Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-683-30379-7.
{{cite book}}
: Unknown parameter|name-list-format=
ignored (help) - ↑ De Souza MJ, Toombs RJ (2010). "Amenorrhea". In Santoro NF, Neal-Perry G (eds.). Amenorrhea: A Case-Based, Clinical Guide. Humana Press. pp. 101–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60327-864-5.
- ↑ Gladwell, Malcolm (2000-03-10). "John Rock's Error". The New Yorker. http://gladwell.com/john-rock-s-error/. பார்த்த நாள்: 2013-11-30.