மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டம்

மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி , கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியாகும் . இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக 1978-ம் ஆண்டு துவங்கப்பட்டு , 1998 –ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2005 –ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2017 ஆம் கல்வி ஆண்டின் படி 300 மாணவ மாணவிகளும் 15 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள்

பெற்றோர் ஆசிரியர் கழகம்[தொகு]

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவராக முன்னாள் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பணியாற்றி வருகிறார்.

முன்னாள் மாணவர் சங்கம்[தொகு]

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர் சங்கத்தினை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்[தொகு]

  1. நாட்டு நலப்பணித் திட்டம்
  2. சாரண சாரணியர் இயக்கம்
  3. சுற்றுச்சூழல் மன்றம்
  4. பசுமைப்படை
  5. செஞ்சிலுவைச் சங்கம்

நாட்டு நலப்பணித்திட்டம்[தொகு]

நாட்டுநலப்பணித்திட்டம் 2015-ம் ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் 12-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.இப் பள்ளியில் கணிணி ஆசிாியா் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறாா்.

தகவல் தொழில் நுட்ப மன்றம்[தொகு]

இப்பள்ளியின் தகவல் தொழில் நுட்ப மன்றம்

இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புதிய தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள தகவல் தொழில்நுட்ப மன்றம் வாரந்தோறும் செயல்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற கணினிப்போட்டியில் இப்பள்ளி மாணவன் அரசுப்பள்ளிகளில் முதல் இடம் பெற்றான்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

புகைப்படத் தொகுப்பு