மாங்குப்பை பச்சியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சியம்மன் கோயில் நுழைவாயில்

பச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டத்தில், மாங்குப்பை ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு நாட்டுப்புறக் கோயிலாகும்.

அமைவும், இணைப்பும்[தொகு]

இக்கோயில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 10 கல் தொலைவில் அமைந்துள்ளது.

வேண்டுதல்[தொகு]

வேண்டுதல் மரம்

வேண்டுதலின் பொருட்டு மனதில் உருவாகும் எண்ணங்களை தாளில் எழுதி அவற்றை தெய்வம் நிறைவேற்றும் என்னும் நம்பிக்கையில்,இக்கோயிலின் மரத்தில் கட்டி விடுகின்றனர்.

திருவிழா[தொகு]

ஆண்டு தோறும் இக்கோயிலில் திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது மக்கள் பொங்கல் வைத்தல், பச்சியம்மனுக்கு காணிக்கை செலுத்துதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.திருவிழாவின் போது பம்பை அடித்து பம்பைக்காரர் பச்சியம்மன் பாடலைப் பாடுவார்.

பச்சியம்மன் திருக்கோயில் காட்சிக்கூடம்[தொகு]