உள்ளடக்கத்துக்குச் செல்

மாக்சின் பெல்ட்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்சின் பெல்ட்மேன்
பிறப்பு(1945-12-26)திசம்பர் 26, 1945
ப்ரூக்ளின், நியூ யார்க் நகரம், அமெரிக்கா
இறப்புஆகத்து 17, 2007(2007-08-17) (அகவை 61)
ஆல்பெக்குவெர்க், நியூ மெக்சிகோ, அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்எல் காமினோ கல்லூரி
பணிபாடகர், பாடலாசிரியர், நடச்சுவையாளர்
அறியப்படுவதுபெண்கள் இசைக்காக

மாக்சின் "மேக்ஸ்" அடெல் பெல்ட்மேன் (டிசம்பர் 26, 1945 - ஆகஸ்ட் 17, 2007) ஒரு அமெரிக்க நாட்டுப்புற பாடகர்,பாடலாசிரியர், நகைச்சுவை நடிகர் மற்றும் பெண்கள் இசையின் முன்னோடி ஆவார். பெல்ட்மேனின் பாடல் "ஆங்கிரி அட்டிஸ்", மே 1969 இல் முதன்முதலில் இயற்றப்பட்டு 1972 இல் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. இப்பாடல் பெண்கள் இசை இயக்கத்தின் முதல் வெளிப்படையாக விநியோகிக்கப்பட்ட பெண் நேர்பாலீப்புப் பாடல் என்று கருதப்படுகிறது. பெல்ட்மேன் "உரத்த யூத புட்ச்[தெளிவுபடுத்துக] ரநேர்பாலினப் பெண்" என்று அடையாளப்படுத்தப்பட்டார்.

பிந்தைய ஆண்டுகளில், இணையர் ஹெலன் தோர்ன்டனின் கூற்றுப்படி, பெல்ட்மேன் பாலின-திரவ அடையாளத்தைத் தழுவினார். தோர்ன்டன் தனது இணையின் அடையாளத்தை "ஒன்று/அல்லது" என்பதற்கு பதிலாக "இரண்டும்/மற்றும்" என்று விவரித்தார். [1] ஃபெல்ட்மேன் பாலின அடையாளப் படுத்தலை ஏற்றார். மேடைகளில் ஆண்களுக்கான ஆடைகளை அணிந்திருந்தார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பெல்ட்மேன் டிசம்பர் 26, 1945 அன்று நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார். ஒரு குழந்தையாக, ஃபெல்ட்மேனுக்கு பேச்சுத்திணறல் இருந்தது. இதனால் நடிப்பில் பாடங்களைக் கோரினார். ஃபெல்ட்மேன் 1956 இல் கோல்ட்பர்க்ஸ் எனும் நாடகத்தில் பெண் சாரணராக நடித்தார். [3] ஃபெல்ட்மேன் நிகழ்கலை உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்தபோது, குழந்தைகள் நாடகத் தயாரிப்புகளில் நடித்தார்.

பெல்ட்மேன் பாஸ்டனில் உள்ள எமர்சன் கல்லூரியில் நாடகக் கலைகளைப் பயின்றார். நேர்பாலினப் பெண் என்பதற்காக வெளியேற்றப்பட்ட பிறகு, பெல்ட்மேன் மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மின் அதிர்ச்சி சிகிச்சையை மறுத்தார்.[3] 1963 ஆம் ஆண்டில், பீக்கன் ஹில் மற்றும் கேம்பிரிட்ஜ் காபிக்கூடங்களான டர்க்ஸ் ஹெட், ஆர்லியன்ஸ் மற்றும் தி லாஃப்ட் போன்ற துடிப்பான பாஸ்டன் இசை நிகழிடங்களில் ஃபெல்ட்மேன் தனது நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். [4] ஒரு கட்டத்தில், அப்போது பிரலமடையாதிருந்த ஜோஸ் பெலிசியானோவை பெல்ட்மேன் அறிமுகப்படுத்தினார். வெளிப்படையாக தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த பெல்ட்மேன், உள்ளூர் இசைத்தொகுப்பாளர் ஒருவரால், "தவறான கூட்டத்தை" ஈர்ப்பதாக விவரிக்கப்பட்டார். [3]

1968 இல், பெல்ட்மேன் மன்ஹாட்டனுக்கும் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் இடம்பெயன்றார். பெல்ட்மேன் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள எல் கேமினோ கல்லூரியில் பயின்றார்.[5] இவ்வளாகத்தில் பெண்கள் மையத்தைக் கண்டறிய உதவினார்.

தொழில்[தொகு]

மே 13, 1969 இல், ஸ்டோன்வால் கலவரத்திற்கு முன், "ஆங்கிரி அத்தீஸ்" பாடலை பெல்ட்மேன் எழுதினார்.[3] லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இப்பாடலின் அறிமுகமானது, வெளிப்படையான முதல் தன்பாலின ஈர்ப்பு சார்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டது.[6][7]

1970-1971 இல், பெல்ட்மேன் பெண்ணிய நகைச்சுவை இரட்டையர் ஹாரிசன் மற்றும் டைலரை சந்தித்தார். அவர்கள் பெல்ட்மேனின் கல்லூரியில் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தனர். "ஆங்கிரி அத்திஸ்" பாடலைக் கேட்ட பிறகு, பாட்டி ஹாரிசன் மற்றும் ராபின் டைலர் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, தங்கள் நிகழ்ச்சைகளில் ஃபெல்ட்மேனைத் தொடங்கிவைப்பதற்காக அழைத்தனர். [8] பெல்ட்மேன் ஹாரிசன் மற்றும் டைலருடன் இணைந்து கல்லூரிகளுக்காகவும் ஒருமுறை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஃபார் வுமன் என்ற மாநில சிறைச்சாலையிலும் நிகழ்ச்சிகள் நடத்தினார். வென்ச்சுரா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியின் போது பெல்ட்மேன் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவர் கல்லூரியால் அழைக்கப்படவில்லை என்று பார்வையாளர்களுக்கு தெரிவிக்க மேடை மேலாளர் வலியுறுத்தினார். [5]

ஜனவரி 1972 இல் ஹாரிசன் & டைலர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் "ஆங்கிரி அத்திஸ்" பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. [9]

பெல்ட்மேன் தி பேக் ரூமில் ஆலிஸ் எம். பரோக் என்ற நண்பருக்காக அவ்வப்போது நிகழ்ச்சிகளைச் செய்தார். நியூயார்க் நகரத்தில் வில்லேஜ் கேட் மற்றும் அதர் எண்ட், மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஷ் க்ரோவ் ஆகி இடங்களிலும் ஃபெல்ட்மேன் நிகழ்ச்சிகளைச் செய்துவந்தார்.

1974 இல், பெல்ட்மேன் மன்ஹாட்டனில் உள்ள டவுன் ஹாலில் யோகோ ஓனோவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். வெரைட்டி இதழ் இந்த நடிப்பை "மிகப்பெரிய வெற்றி" என்று விவரித்தது, மேலும் பெல்ட்மேன் "அவரது குரல், இசை, விளக்கம் மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் தன்பாலினப் பெண்களை ஈர்க்கக்கூடியவராக நிரூபித்தார்" என்று விமர்சித்தார். [10]

கு கிளக்சு கிளான் ஐ ஆதரித்தவர்களிடமிருந்து காவல் பாதுகாப்பின் கீழ், டெக்சாஸின் ஹூஸ்டனில் 1977 ஆம் ஆண்டு நடந்த தேசிய பெண்கள் மாநாட்டில் பெல்ட்மேன் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தினார். பெல்ட்மேன் பின்னர் நிகழ்வைப் பற்றி கூறும்போது, "முன்னூறு கு கிளக்ஸ் கான் பார்வையாளர்களில் 'அனைத்து வேறு நிறத்தவர்கள், தன்பாலின ஏர்ப்பளர்கள், கம்யூனிஸ்டுகள்கள் மற்றும் கருக்கலைப்பு செய்பவர்களையும் கொல்லுங்கள்' என்று எழுதப்பட்ட பலகைகளை ஏந்தியிருந்தனர். நான் அந்த நான்கில் மூன்று உள்ளவள்."[11][12]

வெளிப்படையாக யூதராக இருந்த பெல்ட்மேன் பெண்கள் இயக்கத்தில் யூத விரோதத்தை நிராகரித்தார். பெல்ட்மேன் 1976 இல் முதல் மிச்சிகன் வ்யோமின் இசை விழாவில் நாடகம் நிகழ்த்தினார். மேலும் 14 முறை அத்திருவிழாவில் பங்கேற்றார். பெல்ட்மேனின் வயோமின் கீதமான "அமேசான்", திருவிழாவின் தொடக்க விழாக்களில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படத் தொடங்கியத. 1986 இல், பெல்ட்மேன் மிச்சிகன் வோமின் இசை விழாவில் பாடலின் உரிமையை வழங்கினார்.

பெல்ட்மேன் 1979 இல் கிளோசெட் சேல் என்ற சாதனை பாடல்தொகுப்பை பதிவு செய்தார். இந்த தொகுப்பில் "ஒயிட் மவுண்டன் மாமா," "ஹோல்ப்ரூக்," "அமேசான்," "கிளோசெட் சேல்," "ஆங்கிரி அத்திஸ்," "எவ்ரிவுமன்," "பாட்டம் லைன்," "ஆப்ஜெக்டிஃபிகேஷன்" மற்றும் "பார் ஒன்" ஆகிய பாடல்கள் அடங்கும்.

பெல்ட்மேனின் இசை ஜான் ஆக்சன்பெர்க்கில் 1975 ஆம் ஆண்டு தன்பாலின ஈப்பாளர்கள் பற்றிய திரைப்படமான எ காமெடி இன் சிக்ஸ் இயற்கைக்கு மாறான செயல்களில் இடம்பெற்றது.

இறப்பு[தொகு]

உடல்நலக் காப்பீடு இல்லாத பெல்ட்மேன், 1994 இல் நோய்வாய்ப்பட்டு ஆகஸ்ட் 17, 2007 அன்று நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியில் தனது 61வது வயதில் காலமானார்.

மரபு[தொகு]

டீ மோஸ்பேச்சரின் 2002 ஆவணப்படமான ரேடிகல் ஹார்மனிஸில் பெண்கள் இசையின் நிறுவனர்களில் ஒருவராக ஃபெல்ட்மேன் அங்கீகரிக்கப்பட்டார். [8]

2011 ஆம் ஆண்டில், "அமேசான்" பாடலின் 35 வது ஆண்டு விழாவில், பெல்ட்மேனின் நினைவாக அமேசான் 35 தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பு ரெக்கே, டப், சல்சா மற்றும் ஒலி பதிப்புகளுடன் அசல் பாடலைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

 1. Kiritsy, Laura (August 30, 2007). "Lesbian trail blazer Maxine Feldman dies". http://www.edgeprovidence.com/index.php?ch=news&sc=&sc2=news&sc3=&id=36268. 
 2. Sullivan, Denise (2011). Keep on Pushing: Black Power Music from Blues to Hip-hop. Chicago Review Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781556528170. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 24, 2017.Sullivan, Denise (2011). Keep on Pushing: Black Power Music from Blues to Hip-hop. Chicago Review Press. ISBN 9781556528170. Archived from the original on March 25, 2017. Retrieved March 24, 2017.
 3. 3.0 3.1 3.2 3.3 Anderson, Jamie (அக்டோபர் 17, 2019). An Army of Lovers. Bella Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781642470451.
 4. Willowroot, Abby (2009). "Maxine Feldman ~ Memories of Max from 1964 on". Archived from the original on சூன் 27, 2018. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 25, 2017.
 5. 5.0 5.1 Morgan, Stacey (January 1973). "Angry Atthis". http://www.queermusicheritage.us/apr2002mf.html. Morgan, Stacey (January 1973). "Angry Atthis". Lesbian Tide.
 6. Haggerty, George; Zimmerman, Bonnie, eds. (செப்டெம்பர் 2, 2003). "Music, women's". Encyclopedia of Lesbian and Gay Histories and Cultures. Taylor & Francis. p. 522. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135578701. Archived from the original on பெப்பிரவரி 15, 2017. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2017.
 7. Mockus, Martha (2000). "Music, Women's". Lesbian Histories and Cultures: An Encyclopedia, Volume 1. New York: Garland. p. 522. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-1920-7.
 8. 8.0 8.1 Cullen, Frank. Vaudeville, Old & New: An Encyclopedia of Variety Performers in America. New York [u.a.]: Routledge. pp. 372–375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-93853-2.Cullen, Frank (2007). "Maxine Feldman". Vaudeville, Old & New: An Encyclopedia of Variety Performers in America. New York [u.a.]: Routledge. pp. 372–375. ISBN 978-0-415-93853-2.
 9. St. John, Martin (April 11, 1973). "Liberation music, angry and proud, enters gay life". http://www.queermusicheritage.us/nov2000m.html. 
 10. Mano, D. Keith (மார்ச்சு 15, 1975), "Lib on the Rocks", National Review, archived from the original on நவம்பர் 16, 2021, பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 15, 2021
 11. Hayes, Eileen M. (2010). Songs in Black and Lavender: Race, Sexual Politics, and Women's Music. University of Illinois Press. pp. 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-09149-0.
 12. Morris, Bonnie J. (1999). Eden Built by Eves: The Culture of Women's Music Festivals. Alyson Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781555834777.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சின்_பெல்ட்மேன்&oldid=3886645" இலிருந்து மீள்விக்கப்பட்டது