உள்ளடக்கத்துக்குச் செல்

மழைத்தூவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மழைத்தூவான்

மழைத்தூவான் (Irrigation sprinkler) என்பது ஒரு நுண்நீர்ப்பாசனக் கருவி. இது நீரை சிக்கனமாக பயன்படுத்த உதவுகிறது. மழைத்தூவான் மூலம் பாசனம் செய்வதால் நீர் பயன்படுதிறனும் அதிகரிக்கும்.[1]

பயன்கள்

[தொகு]
  • 50 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது.
  • வேலையாட்களின் தேவை குறைவு.
  • மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
  • மற்ற பாசன முறைகளில் அதிக அளவு மண்ணில் உள்ள கீழ் அடுக்குகளுக்கு சென்று விடுகிறது.
  • மற்ற பாசன முறைகளில் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடிமண் அடுக்குகளுக்கு நீர் மூலம் சென்றுவிடுகிறது. மேலும் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண் அரிமாணம் மூலம் அடித்து செல்லப்படுகிறது. ஆனால் மழைத்தூவான் மூலம் நாம் பாசனம் செய்தால் இவை தவிர்க்கப்படுகின்றது.
  • மழைத்தூவான் மூலம் நாம் நீரை மழைபோல பாசனம் செய்வதால் காற்று மண்ணுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  • நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கிறது. நோய் காரணிகள் மற்றும் சிறு பூச்சிகள் நீரில் அடித்து செல்லப்படுகிறது.
  • மழைத்தூவான் மூலம் பாசனம் செய்கின்ற நீரில் நாம் ஊட்டச்சத்துக்களை கரைத்து உரப்பாசனம் செய்யலாம்.
  • மழைத்தூவான் மூலம் பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாலைக் கொல்லி மருந்துகளையும் பாசன நீருடன் கலந்து தேவையான போது தெளிக்கலாம். இதன் மூலம் வேலையாள் செலவு குறைவதுடன் நிலத்தில் உள்ள எல்லா இடத்திற்கும் ஈடுபொருட்களை இடலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CHAPTER 5. SPRINKLER IRRIGATION". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைத்தூவான்&oldid=3324473" இலிருந்து மீள்விக்கப்பட்டது