மல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மல்லி
இயக்கம்சந்தோஷ் சிவன்
தயாரிப்புசந்தோஷ் சிவன்
கதைசந்தோஷ் சிவன்,
ரவி தேஷ்பண்டே
இசைஅஸ்லம் முஸ்தபா
நடிப்புP. சுவேதா
Priya
ஜனகராஜ்
பரமேஷ்வரன்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புA. சிறீகர் பிரசாத்
வெளியீடு1998
ஓட்டம்90 நிமிடங்கள்
மொழிதமிழ்

மல்லி திரைப்படம் 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும்,நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஏழைப் பெண்ணான மல்லி P. சுவேதா தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள்.மேலும் தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள்.அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள்.ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊனங்கள் மாறிவிடும் என்று கூறுகின்றான்.அவளும் அந்நீல நிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள் இதுவே கதையின் கருவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லி_(திரைப்படம்)&oldid=1883604" இருந்து மீள்விக்கப்பட்டது