பி. ஸ்வேதா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பி. ஸ்வேதா (P. Shwetha) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த இவர் சந்தோஷ் சிவன் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மல்லி (1998) திரைப்படத்தின் வழியாக அறிமுகமானார். அப்படத்தில் மல்லி என்ற சிறுமியாக நடித்தார். தனது சிறந்த நண்பரின் நோயைக் குணப்படுத்தக்கூடிய நீல நிற தெய்வமணிக் கல்லைத் தேடும் சாகசத்தில் ஈடுபடும் பெண்ணாக அதில் நடித்தார். அப்படத்தில் நடித்ததற்காக 1999 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தைக் கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். குட்டி திரைப்படத்தில் நடித்ததற்காக 2002 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தைக் கலைஞருக்கான மற்றொரு தேசிய திரைப்பட விருதை வென்றார். குட்டியின் கதை குழந்தைத் தொழிலாளர் பற்றியது. இவர் சந்தோஷ் சிவன் படமான நவரசாவில் நடித்தார்.
இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டவர்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1998 | மல்லி | மல்லி (சிறுமி) | தமிழ் | சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருது |
1998 | தேசிய கீதம் | தமிழ் | "என் கனவினை" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
1999 | மனம் விரும்புதே உன்னை | கவிதா | தமிழ் | |
2001 | குட்டி | குட்டி | தமிழ் | சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருது |
2004 | ஆய்த எழுத்து | ஜோ | தமிழ் | |
2005 | நவரசா | ஸ்வேதா | தமிழ் |