மல்லியம்மன் துர்கம்
Appearance
மல்லியம்மன் துர்கம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 11°35′00″N 77°20′21″E / 11.5832053°N 77.3391596°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மல்லியம்மன் துர்கம் (Malli Amman Durgham) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் வனப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம்.[3] இந்த ஊருக்குக் கெம்ப நாயக்கன் பாளையம் முதல் கடம்பூர் சாலையில் இரண்டாவது மைல் என்னும் இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் செங்குத்தான மலைகளில் கால்நடையாக ஏறிச் செல்ல வேண்டும் அல்லது கல்கடம்பூர் சென்று சுமார் 10 கிலோ மீட்டர் சாய்வான மலைகளிலும் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு சுமார் மொத்தம் 110 வீடுகளும், 75 குடும்பங்களும் இங்கு உள்ளன.
வரலாறு
[தொகு]இந்தக் கிராமம் கடந்த இரு நூற்றாண்டுகளாக இருந்ததற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இங்கு பிரித்தானியர்கள் கொடுத்த துப்பாக்கி உரிமமும், நிலப்பட்டாக்களும் கூட இங்குள்ள மக்களிடம் உள்ளன.
இதன் அண்மையிலுள்ள ஊர்கள்
[தொகு]கெம்ப நாயக்கன் பாளையம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.