மலைப்பாறை (திருக்குர்ஆன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸூரா அல்-ஹிஜ்ர் (Sūrat al-Ḥijr, அரபு மொழி: سورة الحجر‎, "மலைப்பாறை") இது திருக்குர்ஆன் உடைய 15ஆவது ஸூரா (அத்தியாயம்) ஆகும். இது 99 வசனங்களைப் பெற்றுள்ளது. இது ஒரு மக்கான் ஸூரா ஆகும்.

இது முகம்மது நபி அவர்கள் மெக்காவில் தங்கியிருந்த இறுதி ஆண்டில் 12ஆவது ஸூரா (அத்தியாயம்) யூசுப் என்பதைப் பெற்றவுடன் வெகு விரைவில் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இறைவனால் ஆரம்ப காலத்தில் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) ஆகும். அதாவது இந்த ஸூரா முகம்மது நபி மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் அவருக்கு முன்காணாத புதுத் தரிசனம் கிடைத்தது உறுதிப்படுகிறது. இதெ காலகட்டத்தில் இவருக்கு இசுலாத்தில் கடவுள் என்னும் இறை வாழ்த்து ஸூராவும்  (அத்தியாயம்) இறைவனால் அருளப்பட்டுள்ளது

இறைவனால் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) என்பது இறைவனைத் துதிக்கும் சுருக்கமான ஒலி இயைபு உடைய வசனங்களைக் கொண்டுள்ளது.  இது இறைவனால் செயல்திறன் மிக்க ஆற்றலுடைய வார்த்தைகளுடன் வெகு விரைவில் முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பெற்றதாகும்

வெளி இணைப்புகள்[தொகு]