உள்ளடக்கத்துக்குச் செல்

மலிகா ஜகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலிகா ஜகான்
Malika Jahan
ஜெய்சல்மர் இளவரசி
துணைவர்
ஜஹாங்கீர்
(தி. 1587; d. 1627)
மரபு
தந்தைராவல் பீம் சிங்
மதம்இந்து

மலிகா ஜகான் (ஆங்கிலம்: Malika Jahan; பாரசீக மொழி: ملکہ جھان‎; "உலகின் ராணி" என்று பொருள்) என்பவர் ஜெய்சல்மர் இளவரசி மற்றும் முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மனைவி ஆவார்.[1]

குடும்பம்

[தொகு]

மலிகா ஜகான்,<[2] ஜெய்சல்மேர் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்சல்மேரின் ஆட்சியாளரான ராவல் பீம் சிங்கின் மகளாக[3][4] மற்றும் பேரரசர் அக்பரின் சமகாலத்தவரும் இவருக்கு ஏகாதிபத்திய சேவையில் இருந்தவரும் ஆவார்.[5] இவர் ராவல் ஹர்ராஜின் பேத்தி ஆவார். இவருக்கு கல்யாண் மால், பாகர் மற்றும் சுல்தான் என்ற மூன்று தந்தைவழி மாமாக்கள் இருந்தனர்.[6] இவரது அத்தை 1570-ல் பேரரசர் அக்பருடன் திருமணம் செய்து கொண்டார்.[7] மேலும் இவருடைய மகள் மகி பேகம் ஆவார்.[8]

இராவல் பீம் 1578-ல் தனது தந்தை ஹர்ராஜுக்குப் பிறகு பதவியேற்றார்.[6] 1616-ல் பீம் இறந்த பிறகு, இவர் நாது சிங் என்ற மகனை இரண்டு வயதில் விட்டுச் சென்றார்.[9][10] இவர் பாதிகளால் கொல்லப்பட்டார்.[6] இவருக்குப் பிறகு இவரது இளைய சகோதரர் கல்யாண் மால் ராவலாக பதவியேற்றார்.[10]

திருமணம்

[தொகு]

ஜஹாங்கீர் இளவரசராக இருந்தபோது மலிகா ஜகானை மணந்தார். மேலும் இவருக்கு 'மலிகா ஜகான்' என்ற பட்டத்தை வழங்கினார்.[11] இதன் பொருள் "உலகின் ராணி" என்பதாகும். ஜஹாங்கீர் தனது நினைவுக் குறிப்புகளில் தனது குடும்பம் எப்போதும் முகலாயர்களுக்கு விசுவாசமாக இருந்ததால் இந்த கூட்டணி ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.[10]

பெருமை

[தொகு]

மலிகா ஜகான் என்பது பிரோஸ் எச். மடோனின் வரலாற்று நாவலான தி தேர்ட் பிரின்ஸ்: எ நாவலில் (2015) ஒரு கதாபாத்திரம் ஆகும்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Lal, Kishori Saran (1 January 1988). The Mughal Harem. Aditya Prakashan. pp. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-185-17903-2.
 2. Shujauddin, Muhammad; Shujauddin, Razia (1967). The Life and Times of Noor Jahan. Caravan Book House. p. 96.
 3. The Moslem World - Volumes 1-2. Nile Mission Press. 1985. p. 72.
 4. Soma Mukherjee (2001). Royal Mughal Ladies and Their Contributions. Gyan Books. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-121-20760-7.
 5. Naravane, M. S. (1999). The Rajputs of Rajputana: A Glimpse of Medieval Rajasthan. APH Publishing. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-176-48118-2.
 6. 6.0 6.1 6.2 Somānī, Rāmavallabha. History of Jaisalmer. Panchsheel Prakashan. pp. 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-170-56070-8.Somānī, Rāmavallabha (1990). History of Jaisalmer. Panchsheel Prakashan. pp. 59–60. ISBN 978-8-170-56070-8.
 7. Ruby Lal (2005). Domesticity and power in the early Mughal world. Cambridge University Press. pp. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85022-3.
 8. Beveridge, Henry (1907). Akbarnama of Abu'l-Fazl ibn Mubarak - Volume III. Asiatic Society, Calcuta. p. 283.
 9. Rajasthan, (India), K. K Sehgal. Rajasthan District Gazetteers, Volume 18. Directorate, District Gazetteers. p. 37.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 10. 10.0 10.1 10.2 Jahangir, Emperor. The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. Washington, D. C.: Freer Gallery of Art, Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; New York: Oxford University Press. pp. 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512718-8.
 11. Singh, Rajvi Amar (1992). Medieval History of Rajasthan: Western Rajasthan. Rajvi Amar Singh. p. 1456.
 12. Madon, Phiroz H. (8 April 2015). The Third Prince: A Novel. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-184-95140-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலிகா_ஜகான்&oldid=4050304" இலிருந்து மீள்விக்கப்பட்டது