உள்ளடக்கத்துக்குச் செல்

மலாங்கி (கொள்ளைக்காரன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாங்கி (1890கள் – 1927) காலனித்துவ பிரித்தானிய இந்தியாவின் ஆளுகையின் கீழ் உள்ள பஞ்சாபில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன் ஆவார். அவர் தனது சொந்த மாவட்டமான கசூரில் 'ராபின்ஹுட்' (மக்களுக்கு உதவும் கொள்ளைக்காரன்) என்று அழைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தின் ஆங்கிலேயே, பஞ்சாபின் அரசு அதிகாரிகளை மீறி, பொது மக்களின் பக்கம் நின்ற மலாங்கி போன்ற கொள்ளையர்களின் பங்கைப் விடுதலை போராட்டத்தோடு ஒப்பிட்டு பாராட்டி பாடல்களை எழுதி பாடும் நாட்டுப்புற பாரம்பரியம் பஞ்சாபில் உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மக்களால் நாட்டுப்புறக் கதாநாயகர்களாகக் கருதப்பட்ட நிஜாம் லோஹர், இமாம் தின் கோஹவியா மற்றும் ஜக்கா ஜாட் போன்ற மற்றவர்களும் நன்கு அறியப்பட்ட பஞ்சாபி 'ராபின் ஹூட்ஸ்' ஆவர்.[1]

இந்த கொள்ளையர்களின் துணிச்சலைப் பற்றியும், ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரத்தைப் பற்றியும்  நாட்டுப்புற பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. மலாங்கியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் பஞ்சாபில் பாடப்பட்ட ஒரு பாடல் இவ்வாறு செல்கிறது:

தின் நு ராஜ் ஃபிராங்கி டா
ராதி ராஜ் மலாங்கி டா

(அன்றைய காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி
ஆனால் மலாங்கி தான் இரவை ஆள்பவன்)

[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கசூர் என்ற மாவட்டத்தில் உள்ள லகோ என்ற கிராமத்தில் மலாங்கி தனது குடும்பத்தாருடன் வாழ்ந்தார். அவர் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தை மலாங்கிக்கு விட்டுச் சென்ற நிலம் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுக்களால் கைப்பற்றப்பட்டது. எனவே மலாங்கியின் தாய் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு ஆதரவற்றவராக இருந்தார், மேலும் அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும் ஒரு சீக்கியரை மணந்தார். மலாங்கி வளர்ந்து விபரம் தெரிந்ததும் தனது நிலத்தை தனது கிராமத்தின் நிலப்பிரபுக்களிடமிருந்து மீண்டும் தன்வசப்படுத்தவும் அதை மீட்கவும் போராடினார். ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட லம்பார்டார் (கிராமத் தலைவர்) உதவியுடன் நிலப்பிரபுக்கள், மலாங்கியை உள்ளூர் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த முடிந்தது, இப்படியாக அவர் ஒரு கொள்ளையனாக மாறி தனது கோபத்தில் எதிர்வினையாற்றினார்.[2]

சமீப காலங்களில் கூட, அந்த பகுதிகளில் உள்ள சில பிரபலமான குற்றவாளிகள் மற்றும் கொள்ளைக்காரர்கள் தங்கள் உண்மையான பிறந்த பெயர்களுடன் 'மலாங்கி' என்பதைப் புனைப்பெயராக சேர்ப்பதன் மூலம் சமூகத்தில் தங்கள் நற்பெயரை அதிகரிக்க  பயன்படுத்துகின்றனர். .[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mushtaq Soofi (22 April 2016). "Punjab Notes: Dacoit: criminal and hero". Dawn (newspaper). https://www.dawn.com/news/1253625. 
  2. 2.0 2.1 2.2 Haroon Khalid (30 April 2016). "Malangi and Nizam Lahore, the Robin Hoods who ruled the forests of Punjab". Dawn (newspaper). https://www.dawn.com/news/1255424/malangi-and-nizam-lohar-the-robin-hoods-who-ruled-the-forests-of-punjab. Haroon Khalid (30 April 2016). "Malangi and Nizam Lahore, the Robin Hoods who ruled the forests of Punjab". Dawn (newspaper). Retrieved 14 June 2021.
  3. Security increased to prevent retaliatory attacks The News International (newspaper), Published 4 November 2013, Retrieved 14 June 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாங்கி_(கொள்ளைக்காரன்)&oldid=3925524" இலிருந்து மீள்விக்கப்பட்டது