மலாக்கா கலைக்கூடம்

ஆள்கூறுகள்: 2°11′29.8″N 102°14′58.3″E / 2.191611°N 102.249528°E / 2.191611; 102.249528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா கலைக்கூடம்
Malacca Art Gallery
Balai Seni Lukis Melaka
மலாக்கா ஓவியக் கலைக்கூடம்
மலாக்கா ஓவியக் கலைக்கூடம்
Map
நிறுவப்பட்டது1958
அமைவிடம்மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா
ஆள்கூற்று2°11′29.8″N 102°14′58.3″E / 2.191611°N 102.249528°E / 2.191611; 102.249528
வகைகலைக்கூடம்
சேகரிப்புகள்ஓவியங்கள்; சிற்பங்கள்
சேகரிப்பு அளவு150 ஓவியங்கள்; 40 சிற்பங்கள்
பொது போக்குவரத்து அணுகல்உண்டு
அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம்இல்லை

மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான கலைக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கலைக்கூடம், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1640-ஆம் ஆண்டுகளில், இடச்சு மலாக்கா அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமாகச் செயல்பட்டது.

தற்போது அதே கட்டிடத்தின் தரைத் தளத்தில் மலேசிய இளைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு உள்ளது.[2]

பொது[தொகு]

கலைக்கூடத்தின் நிரந்தரப் பகுதியில் ஏறக்குறைய 150 ஓவியங்கள் மற்றும் 30 சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலேசியாவின் பிரபல ஓவியர்களான ரபி அப்துல் ரகுமான், வான் உய்-சியு, ரகமத் ரம்லி, ரபி அப்துல் கானி, செகான் சான் போன்றவர்கள் வரைந்த ஓவியங்கள் அந்தக் கலைக்கூடத்தில் சிறப்பு படைப்புகளாக உள்ளன.[3]

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெரார்ட் வான் டென் ஓடெலார் என்பவரின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஓவியங்களைத் தவிர, கையெழுத்து கண்காட்சிகள், திரைப்படக் கண்காட்சிகள் போன்ற பிற கண்காட்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The 40 best art galleries in Melaka". Wanderlog. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
  2. Chai, Yee Hoong (23 September 2021). "Architecture development in Malaysia: A reflection of hope and progress". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. "Melaka Art Gallery - The Art Gallery displays works by local artist, both Melakan and from around Malaysia. A large area is devoted to rotating exhibits". Asia for Visitors - Your complete online travel resource for Southeast Asia. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
  4. Daniel, Timothy P. (2005). Building Cultural Nationalism in Malaysia: Identity, Representation, and Citizenship. New York: Routledge. பக். 108–109. https://books.google.com/books?id=Bv6ezG3V968C&pg=PA108. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_கலைக்கூடம்&oldid=3909295" இலிருந்து மீள்விக்கப்பட்டது