மலட்டு எச்சம்
Appearance
மலட்டு எச்சம் எனப்படுவது உடற்றொழிலியல் ரீதியில் பாலியல் இனப்பெருக்கம் செய்யமுடியாத உயிரினங்களைக் குறிக்கும். இவை பல்வேறு வகையில் ஆக்கமடையலாம்.
- கோவேறு கழுதை, முதலான மலட்டுக் கலப்பினம்;
- சில சிறப்பான இலிங்க உறுப்புகள். எ.கா: சில பூக்கும் தாவரங்களில் காணப்படும் மகரந்தங்கள் மலட்டுத் தன்மை கொண்டவை.
- மலட்டுத்தன்மை என்பது ஒரு அங்கி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தமது சந்ததியை விருத்திப் படுத்த முடியாமையைக் குறிக்கும். ஆனால் மலட்டு எச்சம் எனப்படுவது சந்ததியை விருத்திசெய்ய மாட்டாத இனம் ஒன்றைக் குறிக்கும்.
மலட்டு எச்சங்கள் பல காரணங்களால் உருவாகலாம். கோவேறு கழுதை போல மரபுரிமைக் காரணிகளாலோ, சூழலில் இருந்து பெற்றுக் கொண்டதாகவோ அல்லது கதிர்வீச்சு காரணமாகவோ அமையலாம்..
மலட்டு எச்சங்கலினாலான பொருளாதாரப் பயன்கள்
[தொகு]- வித்துக்களில்லாத பழங்களின் உற்பத்தி
- கொல் பரம்பரையலகு கொண்ட வித்து உற்பத்தியால் அங்கியொன்றின் அடுத்த சந்ததி உருவாகுவதைத் தடுப்பது.