மறந்து போன பக்கங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறந்து போன பக்கங்கள்
நூலாசிரியர்செங்கோட்டை ஸ்ரீராம்
உண்மையான தலைப்புமறந்து போன பக்கங்கள
பட வரைஞர்தமிழ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைவரலாறு இலக்கியம்
வகைபொதுமை
வெளியீட்டாளர்விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட நாள்
ஆகஸ்ட் 2007
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்224
ISBN978-81-89936-49-5

மறந்து போன பக்கங்கள் என்பது செங்கோட்டை ஸ்ரீராமால் எழுதப்பட்டு விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட நூல் ஆகும்.

என்றும் மறக்கக் கூடாத மனிதர்களை, இலக்கியங்களை, வாழ்வியல் செய்திகளை, ஆன்மிகச் சிந்தனைகளை, பெரியோர் அனுபவங்களை எடுத்துரைக்கும் காலச்சுவடு என்று இந்த நூ‌ல் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. இந்த நூலுள் வீரன் வாஞ்சிநாதன், எஸ்.ஜி. கிட்டப்பா, கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை, உ.வே.சா, இரசிகமணி டி.கே.சி போன்ற மனிதர்கள் பற்றிய அரிய செய்தியகளும் கம்பராமாயணம், ஆழ்வார் பாசுரங்கள், பகவத்கீதை போன்ற சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]