மருத்துவன் நல்லச்சுதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவன் நல்லச்சுதனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் கிட்டியுள்ள பரிபாடல்களில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைப் பாடிவந்தவர்.

பண் பாடல் எண் பாடலாசிரியர் பாடற்பொருள்
பாலையாழ் என்னும் பாலைப்பண் 6, 8, 9 நல்லந்துவனார் முறையே வையை. செவ்வேள், செவ்வேள்
பாலையாழ் என்னும் பாலைப்பண் 10 கரும்பிள்ளைப் பூதனார் வையை
நோதிரம் 15 இளம்பெருவழுதியார் திருமால்
காந்தாரம் 19 நப்பண்ணனார் செவ்வேள்

இந்த இசையமைப்பாளர் வேறு. பரிபாடல் பாடிய நல்லச்சுதனார் வேறு எனக் கொள்வதே சான்றுகளின் அடிப்படையில் கொள்வது பொருத்தமானது. பெயர் ஒப்புமை பற்றி ஒருவர் எனல் ஒருவகை ஊகம்.