சங்ககால இசையமைப்பாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிபாடல் இசை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்த நூல் 70 பாடல்களை கொண்டிருந்தது என இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. தற்போது 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பிற நூல் உரைகளில் கிடைக்கும் பாடல்களில் பாடல்களில் பரிபாடல் எனக் கொள்ளத்தக்கவை என அறிஞர்கள் கருதும் 12 பாடல்கள் பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பில் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிபாடல்களை அக்காலத்தில் இசையமைத்துப் பாடியுள்ளனர். பாடியவர்களும், பாடல்களும்

கண்ணகனார் 21
கண்ணன் நாகனார் 5,
கேசவனார் 14 தன் பாடலுக்குத் தானே இசையமைத்துப் பாடியவர்
நந்நாகனார் 12,
நல்லச்சுதனார் 16, 17, 18, 20,
நன்னாகனார் 2,
நாகனார் 11,
பித்தாமத்தர் 7,
பெட்டன் நாகனார் 3, 4
மருத்துவன் நல்லச்சுதனார் 6, 8, 9, 10, 15, 19,

சங்ககாலப் பண்கள்[தொகு]

பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்'. [1]

இந்தப் பாடல்கள் எந்தப் பண்ணில் பாடப்பட்டன என்னும் குறிப்புகளும் ஒவ்வொரு பாடலுக்கும் தரப்பட்டுள்ளன.

பண்ணுப் பாலையாழ் 11 பாடல்கள் (2 முதல் 12)
பண் நோதிரம் 5 பாடல்கள் (13 முதல் 17)
பண் காந்தாரம் 4 பாடல்கள் (18 முதல் 21)

மேற்கோள்[தொகு]

  • சுப்பிரமணியன், முனைவர்.ச.வே., சங்க இலக்கியம் மூலம் முழுவதும், 2007, குறிப்புரை

அடிக்குறிப்பு[தொகு]