மருதாநதி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதாநதி (ஆங்கில மொழி: Marudhanadhi) திண்டுக்கல் மாவட்ட பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கடுகுதடி, கோம்பை ஆகிய பகுதிகள் இந்த நதிக்கு முக்கிய நீர் ஆதாரங்களாகும்.[1] ஆத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 6500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.[2] சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யங்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் மூலமாகவும் உள்ளது.

மருதாநதி அணை[தொகு]

74 அடி உயரம் கொண்ட மருதாநதி அணையானது 1979 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[3] தமிழ்நாடு நீர்வளத் துறையில் மதுரை மண்டலக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 189 மில்லியன் கன அடியாகும்.[4] ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் காலத்தில் அணை திறக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதாநதி_அணை&oldid=3824215" இலிருந்து மீள்விக்கப்பட்டது