மரியன் ஆண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியன் ஆண்டர்சன் (Marian Anderson பிப்ரவரி 27, 1897 - ஏப்ரல் 8, 1993) [1] மரபார்ந்த மற்றும் ஆன்மீக பாடல்கள் பாடும் அமெரிக்க பாடகர் ஆவார். இவர் 1925 மற்றும் 1965 க்கு இடையிலான காலங்களில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பா முழுவதும் பல மேட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.1940 மற்றும் 1965 க்கு இடையில் ஜேர்மன்-அமெரிக்க பியானோ கலைஞர் ஃபிரான்ஸ் ரூப் அவரது பக்கவாத்தியமாக இருந்தார். [2]

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் இனரீதியான கறுப்பின கலைஞர்களுக்கான போராட்டத்தில் ஆண்டர்சன் ஒரு முக்கிய நபராக இருந்தார் 1939 ஆம் ஆண்டில் டாட்டர்ஸ் ஆஃப் தெ அமஎரிகன் ரிவொல்யூசன் குழு (டிஏஆர்) வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் பாடுவதற்கு ஆண்டர்சனுக்கு அனுமதி மறுத்துவிட்டார். இந்த நிகழ்வு மூலம் இவர் சர்வதேச கவனத்தினைப் பெற்றார். நாட்டின் முதல் பெண்மணியான எலினோர் ரூசுவெல்ட் மற்றும் அவரது கணவர் பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட் ஆகியோரின் உதவியுடன், ஆண்டர்சன் 1939 ஏப்ரல் 9, ஈஸ்டர் தினத்தன்று தலைநகரில் உள்ள லிங்கன் நினைவிடத்தின் படிகளில் திறந்தவெளி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. 75,000 க்கும் அதிகமான மக்கள் முன்னிலையிலும் மற்றும் ஒரு மில்லியன் கணக்கான மக்கள் வானொலியிலும் இவரது பாடலைக் கேட்டனர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மரியன் ஆண்டர்சன் பிப்ரவரி 27, 1897 இல் பிலடெல்பியாவில் பிறந்தார்.ஜான் பெர்க்லி ஆண்டர்சன் (சி. 1872-1910) மற்றும் அன்னி டெலிலா ரக்கர் (1874-1964) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவரது தந்தை பிலடெல்பியா நகரத்தில் உள்ள படித்தல் முனையத்தில் பனி மற்றும் நிலக்கரியை விற்கும் பணியினைச் செய்து வந்தார். பின்னர் மதுபான வியாபாரத்தையும் தொடங்கினார். திருமணத்திற்கு முன்பு ஆண்டர்சனின் தாய் லிஞ்ச்பர்க்கில் உள்ள வர்ஜீனியா செமினரி மற்றும் கல்லூரியில் பயின்றார். மேஎலும் இவர் வர்ஜீனியாவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.பிலடெல்பியாவில் உள்ள சட்டத்தின்படி அவர் பட்டம் பெறாததால் இவரால் அங்கு கற்பித்தல் பணியினை மேற்கொள்ள இயலவில்லை. அந்த சட்டத்தின்படி பட்டம் பெறாத கருப்பினத்தவர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொள்ள கூடாது. ஆனால் இது வெள்ளையர்களுக்குப் பொருந்தாது. எனவே அவர் சிறு குழந்தைகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் வருமானத்தைப் பெற்றார். மூன்று குழந்தைகளில் மரியன் மூத்தவர் ஆவார். இவரது இரண்டு சகோதரிகளான ஆலிஸ் (1899-1965, பின்னர் அலிஸ் என்று உச்சரிக்கப்பட்டார்) மற்றும் எத்தேல் (1902-1990) ஆகியோரும் பாடகர்களாக மாறினர். எத்தேல் ஜேம்ஸ் டெப்ரிஸ்டை மணந்தார். [3]

பிற்கால வாழ்வு[தொகு]

ஏப்ரல் 8, 1993 அன்று 96 வயதில் இதய செயலிழப்பு காரணமாக ஆண்டர்சன் இறந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. ஓரிகானின் போர்ட்லேண்டில், அவரது மருமகனான ஜேம்ஸ் டெப்ரிஸ்ட்டின் வீட்டில் இருந்தபோது அவர் இறந்தார். [4] பென்சில்வேனியாவின் கோலிங்டேலில் உள்ள ஈடன் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

பிலடெல்பியாவில் உள்ள மரியன் ஆண்டர்சனின் இல்லமானது தேசிய வரலாற்று இடங்களின் பதிவேட்டில் 2011 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. [5]

சான்றுகள்[தொகு]

  1. Marian Anderson Biography பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம், Lakewood Public Library. Retrieved April 9, 2012.
  2. Keiler 2000.
  3. Allan Keiler, Marian Anderson: A Singer's Journey – Chapter One, The New York Times, 2000 (subscription access)
  4. Ware, Susan, தொகுப்பாசிரியர் (2004). Notable American Women: A Biographical Dictionary Completing the Twentieth Century. 5. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01488-6. 
  5. "National Register of Historic Places Listings". Weekly List of Actions Taken on Properties: 4/11/11 through 4/15/11. National Park Service. 2011-04-22.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியன்_ஆண்டர்சன்&oldid=2892564" இலிருந்து மீள்விக்கப்பட்டது