மனோஜ் பார்கவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் பார்கவா
பிறப்பு1953 (அகவை 70–71)
லக்னௌ, இந்தியா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (ஓராண்டு)
பணிதொழிலதிபர், கொடையாளி
அறியப்படுவதுநிறுவனர், 5-அவர் எனர்ஜி (5-Hour Energy)
சொத்து மதிப்புUSD $4 பில்லியன்

மனோஜ் பார்கவா (பிறப்பு 1953) ஒரு தொழில் முனைவோராகவும் பெரும் செல்வந்தராகவும் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர் ஆவார். இவர் 5-அவர் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமாவார்.[1].

பிறப்பும் வளர்ச்சியும்[தொகு]

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிறந்தவர். சிறியவனாக இருக்கும்போது பெற்றோர்களுடன் அமெரிக்காவில் குடியேறினார்[2] . இளம் அகவையில் இவர் கட்டடத் தொழிலாளியாகவும் கணக்கு எழுதும் எழுத்தராகவும் வாடகைக் கார் ஓட்டியாகவும் அச்சு எந்திரத் தொழிலாளியாகவும் அலுவலக மேலாளராகவும் வேலை செய்தார். 5 அவர் எனர்ஜி என்னும் சக்தி பானத்தை இவருடைய லிவிங் எசன்சியல் என்னும் வணிக நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் இந்த ஊக்கப் பானம் விற்பனை ஆகிறது.

ஹான்ஸ் பவுண்டேசன்[தொகு]

2009 இல் ஹான்ஸ் பவுண்டேசன் என்னும் நிறுவனத்தை மனோஜ் பார்கவா உருவாக்கினார்[3]. உத்தராகண்டம் மாநிலத்தைப் பலவகையாலும் அதன் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்னும் நோக்கில் இந்த அறக்கட்டளை முனைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் உத்தராகண்டம் மாநிலத்தைப் பலவகையாலும் வளர்த்தெடுக்க இவ்வமைப்பு தீர்மானித்துள்ளது. மாநிலம் முழுமையும் உள்ள ஏழைகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்ய உள்ளது. உத்தராகண்டம் மாநில வளர்ச்சியின் பொருட்டு இவருடைய தொண்டு நிறுவனம் ஐந்நூறு கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது அடிமட்டத்தில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிகளைச் செய்கிறது. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் நோய்கள் தடுப்பு முயற்சிக்கும் பிற துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஹான்ஸ் பவுண்டேசன் நிதி உதவிகளைச் செய்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duggan, Daniel; Dustin Walsh (30 May – 5 June 2011). "Energy Drink King Behind $100M Fund". Crain's Detroit Business 27 (22). http://www.crainsdetroit.com. 
  2. Ajmani, Virender. "From Lucknow, India, to Farmington Hills, Michigan". webpage. Michigan Indian Community Blog. Archived from the original on 14 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 February 1012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பார்கவா&oldid=3566990" இலிருந்து மீள்விக்கப்பட்டது