மனவாசகம் கடந்தார்
Appearance
மனவாசகம் கடந்தார் என்பவர் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் 14 நூல்களுள், உண்மை விளக்கம் என்னும் நூலை எழுதியவர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த இவர், சந்தான குரவர்களுள் முதன்மையானவரான மெய்கண்ட தேவரின் மாணவர்.
உசாத்துணைகள்
[தொகு]- பூலோகசிங்கம், பொ., அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.
- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)