மத்திய மகளிர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய மகளிர் பல்கலைக்கழகம்
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি
வகைதனியார்
உருவாக்கம்1993; 31 ஆண்டுகளுக்கு முன்னர் (1993)
சார்புவங்கதேச பல்கலைக்கழக மானியக்குழு
தரநிர்ணயம்பொறியியல் தர நிறுவனம், வங்கதேசம்
துணை வேந்தர்பெர்வீன் அசன்
அமைவிடம்,
வங்கதேசம்
வளாகம்நகரம்
இணையதளம்www.cwu.edu.bd

மத்திய மகளிர் பல்கலைக்கழகம் (Central Women's University) 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வங்காள தேசத்தின் முதல் தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். பெண் கல்வியினை வலியுறுத்தி பிரத்தியேகமாக நிறுவப்பட்ட வங்களா தேசத்தின் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும். பெக்ஜாதி மகமூதா நசீர் 1999 வரை இப்பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தராக பணியாற்றினார்.[1]

நிர்வாகக் குழுவின் தவறான நிர்வாகத்தைத் தொடர்ந்து, கல்வித் தரம் குறைவாக இருந்ததால் பல்கலைக்கழகத்தினை மூட வங்கதேச பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த எட்டு பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] பல்கலைக்கழகத்தை ஏன் மூடக்கூடாது என்று நீதித்துறை அதிகாரிகளால் காரணம் காட்டும் அறிவிப்பும் வழங்கப்பட்டது.[3]

ஆகத்துட் 2010 நிலவரப்படி, பல்கலைக்கழகம் ஒரு புதிய நிர்வாகக் குழுவின் கீழ் இதன் கல்வி நடவடிக்கைகளைத் தொடர நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமா அனுமதியைப் பெற்றது. மேலும் புதிய ஆசிரியர்களுடன் மற்றும் விரிவாக்கப்பட்ட கல்வி சலுகைகளுடன் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுகிறது.[4]

கல்வித் திட்டங்கள்[தொகு]

தற்போது வழங்கப்படும் பட்டங்கள்:

  • வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம்
  • வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்
  • முதுநிலை வணிக நிர்வாகம்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை
  • ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம்
  • அரசியல் அறிவியல் மற்றும் ஆளுகை ஆய்வுகளில் சமூக அறிவியல் இளங்கலை
  • சமூகவியல் மற்றும் பாலின ஆய்வுகளில் சமூக அறிவியல் இளங்கலை
  • புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் சமூக அறிவியல் இளங்கலை சுற்றுச்சூழல் ஆய்வுகள்
  • இதழியல் மற்றும் ஊடக ஆய்வு-இளங்கலை கலை-ஊடக ஆய்வு

துணைவேந்தர்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof Beggzadi passes away". 3 November 2015. http://www.thedailystar.net/city/prof-beggzadi-passes-away-166567. 
  2. Ali, Tawfique (2004-10-19). "40-45 varsities way behind prerequisites". The Daily Star. http://www.thedailystar.net/2004/10/19/d4101901011.htm. பார்த்த நாள்: 2007-03-17. 
  3. Khan, Siddiqur Rahman (2005-03-01). "Ministry serves notice on six private universities". New Age. http://www.newagebd.com/2005/mar/01/met.html. பார்த்த நாள்: 2007-03-17. 
  4. As per the court judgement on Writ Petition number 3873, filed on 16 April 2007.

வெளி இணைப்புகள்[தொகு]