பெக்ஜாதி மகமூதா நசீர்
பெக்ஜாதி மகமூதா நசீர் | |
---|---|
বেগজাদী মাহমুদা নাসির | |
துணைவேந்தர்-மத்திய மகளிர் பல்கலைக்கழகம் | |
பதவியில் 1993–1996 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஏப்ரல் 1929 |
இறப்பு | 3 நவம்பர் 2015 தாக்கா, வங்காள தேசம் | (அகவை 86)
தேசியம் | வங்காள தேசம் |
துணைவர் | ஏ. ஏ. அப்துல் மதீன் |
முன்னாள் மாணவர் | பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி தாக்கா பல்கலைக்கழகம் |
விருதுகள் | பேகம் ரோக்கியா பதக்கம் (2001), அனன்யா முதல் பத்து விருதுகள், (2001) |
பெக்ஜாதி மகமூதா நசீர் (Beggzadi Mahmuda Nasir; 16 ஏப்ரல் 1929-3 நவம்பர் 2015) ஒரு வங்காளதேசக் கல்வியாளர் ஆவார்.[1] இவர் 1956 முதல் 1992 வரை மத்திய மகளிர் கல்லூரியின் நிறுவன முதல்வராகவும், பின்னர் மத்திய மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2][3] 2001ஆம் ஆண்டில் வங்கதேச அரசாங்கத்தால் பேகம் ரோக்கியா பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டில் வங்கங்களா அகாதமியின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
கல்வி
[தொகு]நசீர் 1947-இல் கொல்கத்தா பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1950-இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[3]
தொழில்
[தொகு]நசீர் 1951ஆம் ஆண்டில் தங்காயில் உள்ள குமுதினி கல்லூரி ஆங்கில விரிவுரையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] 1956-ஆம் ஆண்டில், டாக்காவில் மத்திய மகளிர் கல்லூரியை நிறுவினார். 1993-ஆம் ஆண்டில், இவர் வங்காளதேசத்தின் முதல் பெண்கள் பல்கலைக்கழகமான மத்திய மகளிர் பல்கலைக்கழகத்தை நிறுவினார். 1976 முதல் 1986 வரை ஜகாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், 1965 முதல் 1970 வரை டாக்கா பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கல்விக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.[3]
விருதுகள்
[தொகு]- பேகம் ரோக்கியா பதக்கம் (2001)
- ஆனான்யா டாப் டென் விருது (2001)
வாழ்க்கை
[தொகு]நசீர், ஜெகந்நாத் கல்லூரி ஆங்கிலத் துறையின் முன்னாள் தலைவரான ஏ. ஏ. அப்துல் மதீனை மணந்தார்.[6] இவர் 3 நவம்பர் 2015 அன்று இசுகொயர் மருத்துவமனையில் இறந்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chowdhury, Promiti (8 July 2012). "Empowering Girls through Education". Archived from the original on 13 September 2017. Retrieved 12 September 2017.
- ↑ Khan, Tamanna (23 July 2010). "Brabourne's Bengali Muslim Women : Holding the Mast of Education" இம் மூலத்தில் இருந்து 28 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191228175610/http://archive.thedailystar.net/magazine/2010/07/04/education.htm. பார்த்த நாள்: 12 September 2017.
- ↑ 3.0 3.1 3.2 "Prof Beggzadi passes away". 3 November 2015. http://www.thedailystar.net/city/prof-beggzadi-passes-away-166567. பார்த்த நாள்: 12 September 2017.
- ↑ পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (in Bengali). Bangla Academy. Retrieved 31 July 2017.
- ↑ "Beggzadi Mahmuda Nasir (Bangladesh)". http://wikipeacewomen.org/wpworg/en/?page_id=1296. பார்த்த நாள்: 12 September 2017.
- ↑ 6.0 6.1 "Prof Beggzadi passes away". Bangladesh Sangbad Sangstha. 2 November 2015 இம் மூலத்தில் இருந்து 12 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170912235113/http://www.bssnews.net/newsDetails.php?cat=0&id=529578$date=2015-11-02&dateCurrent=2015-11-09.