மதுரீதா ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரீதா ஆனந்த்
ஒளிப்படம்
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது

மதுரீதா ஆனந்த் (Madhureeta Anand) என்பவர் இந்திய சுயாதீன திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார். இவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார், ஐந்து திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார், பல ஆவணப்படங்கள் மற்றும் தொடர்களை இயக்கியுள்ளார். இவரது பல படங்கள் தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளை வென்றுள்ளன. இவர் பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுகிறார். மேலும் பல்வேறு புத்தகங்கள் மற்றும் பிற வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளார். இவர் மகளிர் உரிமைகள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த ஆர்வலராக உள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏற்ற முடிவுகளை ஆதரிக்க இவர் தொடர்ந்து தனது திரைப்படங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தினார்.

வாழ்கை[தொகு]

மதுரீதா ஆனந்த் இயக்குநராக இரண்டு படங்களில் முத்திரை பதித்துள்ளார். மேலும் இவர் எட்டு கதை அம்சங்களை எழுதியுள்ளார். இவரது திறமை பல ஆவணப்படங்கள் மற்றும் பல்வேறு வகைகளைக் கொண்ட தொடர்களை உள்ளடக்கியது. இவரது பல படைப்புகள் தேசிய மற்றும் பன்னாட்டளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. திரைப்பட உருவாக்கத்துக்கான ஜாமியாவில் உள்ள வெகுஜன தொடர்பு ஆய்வு மையத்தில் படித்துள்ள இவர், அதன் பிறகு தனது துறையில் ஒரு ஏற்றமிகு வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், மதுரீதா ஒரு திறமையான எழுத்தாளர் ஆவார். இவரது நிபுணத்துவம் பல்வேறு இலக்கியப் படைப்புகள் மற்றும் வெளியீடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவர் திரைப்படப் பணிகளில் மட்டும் ஈடுபடபவராக இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக வாதிடுபவராக உள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கபட்ட "ஃப்ரீ ஃபார் சேஃப்டி" என்ற உலகளாவிய செல்பேசி பயன்படுத்தீட்டை இவர் அண்மையில் தொடங்கினார்.

மதுரீதா ஆனந்த் இணைந்து எழுதி இயக்கிய படமான "கஜர்யா" படத்தில் இவரது பணிக்காக கணிசமான பாராட்டுகளைப் பெற்றார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இவரது கதை சொல்லும் திறனைப் பாராட்டினார்.

"கஜர்யா" 2015 திசம்பர் 4, அன்று இந்தியாவில் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது. அதன் முதல் காட்சி துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதே நேரத்தில் அதன் சுவிசிலும் அறிமுகமானது ஜெனிவாவில் நடந்த பன்னாட்டு மனித உரிமைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் தி மாண்ட்ரீல் வேர்ல்ட் திரைப்பட விழா மற்றும் எலெஸ் டூர்னெட் பிரஸ்ஸல்ஸ் போன்ற முக்கிய விழாக்களில் திரையிட படம் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் படத்தின் பயணம் தொடர்ந்தது. ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் 2014 இல் பார்த்த முதல் ஐந்து படங்களில் ஒன்றாக "கஜர்யா"வை குறிப்பிட்டது. சீனாவில் நடந்த தி சில்க் ரூட் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

மதுரீதா ஆனந்தின் முதல் வணிகரீதியான முழு நீள திரைப்படமான "மேரே குவாபோன் மே ஜோ ஆயே" 2009 பெப்ரவரி 6 அன்று வெளியிடப்பட்டது. படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் தயாரித்தது. அமேசான் பிரைமில் வெளியான இப்படம் இன்னும் யூடியூப்பில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இவரது திரைப்படவியலில் "லேயிங் ஜானகி டு ரெஸ்ட்" (2007) போன்ற குறிப்பிடத்தக்க ஆவணப் படைப்புகளும், சீதா தேவியை மையமாகக் கொண்ட திரைப்படம் மற்றும் சேர்ந்து எழுதி தயாரிப்பு முயற்சியான "தி மேஜிக் டென்ட்" (2007) போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளும் அடங்கும். 2006 ஆம் ஆண்டு மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் "வாக்கிங் ஆன் எ மூன்பீம்" என்ற குறும்படத்திற்காக வெள்ளி சங்கு விருதைப் பெற்றார்.

தற்சமயம், மதுரீதா ஆனந்த் "கேள் அஸ்" என்ற 90 நிமிட ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆவணப் படம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ட்வின் மூன் எல்எல்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிது.

அதே நேரத்தில், இவர் தனது மூன்றாவது திரைப்படத்தின் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படத்திற்கு தற்காலிகமாக "ஓ மேரே பியா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையாக இருக்கும்.

மதுரீதா பல பன்னாட்டு கூட்டாளர்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சியாக "ஆட்டோபயோகராபி ஆப் எ யோகி" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடரையும் உருவாக்கி வருகிறார். மேலும், இவரது நான்காவது திரைப்படமான "டெகோரேட் தி எர்த்" இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான கூட்டு முயற்சியாக உள்ளது.

இவரது முதல் புதினமான “கிருஷ்ணா சர்க்கஸ்” அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புத்தகக் கடைகளில் கிடைக்க உள்ளது. பூமியைக் காப்பாற்ற காலத்தைக் கடக்கும் ஒரு பெண் உச்ச நாயகியைப் பற்றிய புதினம் இது.

விருதுகளும் அங்கீகாரங்களும்[தொகு]

  • 2016, 47 இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவின் நடுவர் குழு உறுப்பினராக இருந்தார்.
  • இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல நகரங்களுக்குச் செல்லும் "தி போயட்ரி ஆஃப் பர்பஸ்" என்ற புத்தகம் மற்றும் கண்காட்சியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் பதினைந்து பெண் ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
  • மார்ச் 2015 இல் திரைப்படங்கள் மூலம் சமூகப் பிரச்சினைகளில் இவர் ஆற்றிய பணிக்காக கரம்வீர் விருதைப் பெற்றார்
  • 2006 ஆம் ஆண்டு மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் அவரது வாக்கிங் ஆன் எ மூன்பீம் திரைப்படம் வெள்ளி சங்கு விருதைப் பெற்றது [1] [2]
  • இவரது ஆவணப்படமான Education – A reality or a myth 2002 இல் சான்சிபார் சர்வதேச திரைப்பட விழாவில் பரிந்துரைக்கப்பட்டது.
  • சின் என்ற இவரது திரைப்படம் 2002 இல் சியாட்டில் (அமெரிக்கா) தி டாமா திரைப்பட விழாவில் குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது [3] [4]
  • சேனல் 4 (யுகே) இன் விருது பெற்ற தொடரான தி கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் - தி கும்பமேளா (2001) இல் இயக்குனர்கள் குழுவில் இருந்த ஒரே பெண் ஒளிப்படமி இயக்குநராக இருந்தார். [5] அதற்காக ராயல் டெலிவிஷன் சொசைட்டி கிராஃப்ட் விருதைப் பெற்றார்.
  • கும்பமேளா பற்றிய இவரது ஆவணப்படம் - இன் சர்ச் ஆஃப் சால்வேஷன் ஃபார் தி ஜெர்மன் டெலிகாஸ்ட் ஃபுட்பிரிண்ட் (ஆஸ்திரியா/சுவிட்சர்லாந்து/ஜெர்மனி) 2001 இல் அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்த டாமா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத் தயாரிப்பிற்கான விருதைப் பெற்றது. [6] இது 2002 இல் காமன்வெல்த் திரைப்பட விழாவில் ( மான்செஸ்டர், இங்கிலாந்து) பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MIFF'2006 Award Winning FilmsMumbai International Film Festival - Mumbai International Film Festival". பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "MADHUREETA ANAND - Public Service Broadcasting Trust". பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "Desi Talk". பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  4. "Desi Talk". பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  5. "Madhureeta Anand: An independent filmmaker since 1995 - Delhi Citylife Stories | Art & culture, Books, Travel, About Delhi, Delhi Attractions etc". பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.
  6. "Madhureeta Anand - Dubai International Film Festival". பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரீதா_ஆனந்த்&oldid=3885527" இலிருந்து மீள்விக்கப்பட்டது