மதியூர் ரகுமான் (பத்திரிகையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதியூர் ரகுமான்
2018 இல் மதியூர் ரகுமான்
பிறப்பு2 சனவரி 1946 (1946-01-02) (அகவை 78)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிபத்திரிக்கையாளர், பத்திரிக்கையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1970 முதல்
வாழ்க்கைத்
துணை
மலேகா பேகம்
விருதுகள்ரமோன் மக்சேசே விருது

மதியூர் ரகுமான் ( Matiur Rahman) (பிறப்பு 2 ஜனவரி 1946 ) [1] வங்காளதேசத்தில் மிகப் பெரிய அளவில் விநியோகிக்கப்படும் பெங்காலி மொழி நாளிதழான புரோதோம் அலோவின் ஆசிரியர் ஆவார். பத்திரிகை, இலக்கியம் மற்றும் படைப்புத் தொடர்பு கலைப் பிரிவில் 2005 ஆம் ஆண்டுக்கான ரமோன் மக்சேசே விருதைப் பெற்றவர். [2] [3] [4]

சொந்த வாழ்க்கை[தொகு]

ரகுமான், 2 ஜனவரி 1946 இல் வழக்கறிஞர் முகமது பஸ்லூர் ரகுமான் மற்றும் இலுத்புனேசா பேகம் ஆகியோருக்கு மகனாக கொல்கத்தாவில் பிறந்தார். இடைநிலைக் கல்விக்காக, நவாப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் டாக்கா கல்லூரியிலும் பயின்றார். உயர் கல்வியை டாக்கா பல்கலைக்கழகத்தில் பயின்றார் . மேலும், 1967 இல் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோது, இவர் ஒரு பொதுவுடைமைவாதியானார். பின்னர், கிழக்கு பாக்கித்தான் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர், இன்றும் சட்ட விரோதமான வங்காளதேச பொதுவுடைமைக் கட்சியின் ரகசிய உறுப்பினராக இருந்தார்.

தொழில்[தொகு]

இரகுமான் 1970 இல் சோசலிச வார இதழான எகோடாவின் ஆசிரியராக பத்திரிகைத் துறையில் நுழைந்தார். 1970களில் ஐந்தாண்டுகளுக்கு, வோர்ல்டு மார்க்சிஸ்ட் ரிவியூ என்ற இதழின் வங்காளதேசப் பதிப்பையும் வெளியிட்டார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு தொகுதியின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர் அந்தப் பதவியை விட்டு விலகினார். இவர் எகோடாவை விட்டு வெளியேறிய பிறகு, அஜ்கர் ககோஜ் செய்தித்தாளில் பத்திரிகையாளராக பணியாற்றினார். பிப்ரவரி 1992 இல், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இவர் போரர் ககோஜ் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். சபர் உசைன் சௌத்ரி அவாமி லீக் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இணைந்த பிறகு, ஆளும் கட்சிக்கு ஏற்ப செய்தித்தாள்களின் நிலைப்பாட்டை வடிவமைக்க இகுமானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து விலகினார். 1998 இல், இவர் புரோதம் அலோ என்ற தினசரி செய்தித்தாளை நிறுவினார். [4]

பிப்ரவரி 12, 2013 அன்று, ஜமாத்-ஷிபிர் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வாகனங்களை சேதப்படுத்தியபோது இவரது வாகனமும் தாக்கப்பட்டது.

இவர் ஜூன் 2014 இல் வங்காளதேச செய்தித்தாள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மார்ச் 2023 இல், சர்ச்சைக்குரிய மின்னணு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிருபர் சம்சுசமான் சம்சு, உதவி ஒளிப்பதிவாளர் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றவர்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daily Star honours 25 scholars, nation builders". 5 February 2016. https://www.thedailystar.net/country/the-daily-star-honours-24-individuals-213121. 
  2. "Matiur Rahman" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 April 2013.
  3. "Citation for Matiur Rahman". பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.
  4. 4.0 4.1 "Bangladesh through Matiur Rahman of Prothom Alo's eyes". 22 November 2010. பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.