மதன் கலிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன் கலிதா
Madan Kalita
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2001–2006
முன்னையவர்அலகா சர்மா
பின்னவர்அலகா சர்மா
தொகுதிநல்பாரி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மதன் கலிதா (Madan Kalita) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 - 2022 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். அசாம் மாநிலத்தின் நல்பாரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். கலிதா 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நல்பாரி சட்டமன்றத் தொகுதியில் வென்று அசாம் சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2]

கலிதா 2006 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியால் ஒரு வேட்பாளராக மறுக்கப்பட்டார், மேலும் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார், ஆனால் எதிர் வேட்பாளரிடம் தோற்றார். [3]

கலிதா 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று மாரடைப்பால் இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Jyoti. "असम: कांग्रेस के पूर्व विधायक मदन कलिता का निधन, 69 वर्ष की आयु में ली अंतिम सांस; सीएम हिमंता व्यक्त किया शोक" (in hi). Rajasthan Patrika. 
  2. Ahmed, Abu Nasar Saied; Baruah, Joydeep; Bhuyan, Ratna (2006) (in en). Election Politics in Assam : Issues, Trends, and People's Mandate. New Delhi: Akansha Pub. House. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183700573. 
  3. News, Ne Now (22 January 2022). "Assam: Former Congress MLA Madan Kalita dies of cardiac arrest". NORTHEAST NOW. https://nenow.in/north-east-news/assam/former-congress-mla-dies-of-cardiac-arrest.html. 
  4. Tribune, The Assam (22 January 2022). "Former Congress MLA Madan Kalita passes away; CM condoles demise". The Assam Tribune. https://assamtribune.com/assam/former-congress-mla-madan-kalita-passes-away-cm-condoles-demise-1350300. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_கலிதா&oldid=3818584" இலிருந்து மீள்விக்கப்பட்டது