மண் உப்புத்தன்மை
மண் உப்புத்தன்மை (Soil salinity) மண்ணில் உப்பு உள்ளடக்கத்தைக் குறிக்கிறது. மண்ணில் உப்பு உள்ளடக்கத்தை அதிகரிக்கும் செயல்முறை உப்புப்படிவாக்கல் (Salinization) என அறியப்படுகிறது.[1] உப்புக்கள் மண்ணிலும் தண்ணீரிலும் இயல்பாகவே ஏற்படுகின்றன. உப்புப்படிவாக்கல் என்பது இயற்கையான செயல்முறையான வானிலையாலழிதல் மூலமாகவோ பெருங்கடல்கள் உப்பினை உமிழ்தல் காரணமாகவோ ஏற்படலாம். இது நீர்ப்பாசனம் போன்ற செயற்கையான செயல்முறைகளாலும் சோடியம் குளோரைடு படிதல் நிகழலாம்.
இயற்கை உருவாக்கம்
[தொகு]உப்புகள் மண்ணிலும் நீரிலும் உள்ள இயற்கையான உட்கூறாகும். உப்பு படிதலுக்குக் காரணமான அயனிகள்:Na+, K+, Ca2+, Mg2+ and Cl−.
நீண்ட காலமாகவே, மண்ணின் தாதுக்கள் வானிலையாலழிதலுக்கு ஆட்பட்டு உப்புகளை வெளியிட்டு வருகின்றன, இந்த உப்புகள் போதுமான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் ஓடும் நீரால் மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றன அல்லது வெளியேறுகின்றன. கனிம வானிலையாலழிதல் தவிர கூடுதலாக, உப்புகள் தூசி மற்றும் மழைப்பொழிவு மூலம் படிதலுக்குள்ளாக்கப்படுகின்றன. வறண்ட பகுதிகளில் உப்புகள் குவிந்து, இயற்கையாகவே உவர் தன்மையுள்ள மண்ணுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியாவில் உள்ள பெரும்பகுதி உப்புப் படிவாக்கம் இவ்வாறாகவே நிகழ்கிறது.