மஞ்சு பாசு
மஞ்சு பாசு Manju Basu | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காளம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 6 மே 2021 | |
| முன்னையவர் | சுனில் சிங் |
| பதவியில் 2011–2016 | |
| முன்னையவர் | குஷாத்வாஜ் கோஷ் |
| பின்னவர் | மதுசூதன் கோஸ் |
| பதவியில் 2001–2006 | |
| முன்னையவர் | மதன் மோகன் நாத் |
| பின்னவர் | குஷாத்வாஜ் கோஷ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| துணைவர் | பிகாஷ் பாசு |
| வாழிடம் | நேதாஜி பாலி, இச்சாபூர் நவாப்கஞ்ச், நோபரா, மாவட்டம் வடக்கு 24 பரகானாஸ் |
| முன்னாள் மாணவர் | முதுகலை |
மஞ்சு பாசு (Manju Basu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் அரசியல்வாதியும் மற்றும் நோபரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
திருமண வாழ்க்கை
[தொகு]மனிதநேயம் மற்றும் கல்வியில் பட்டதாரியான மஞ்சு, தொழில் ரீதியாக பள்ளி ஆசிரியராக இருந்தார்.[1] மஞ்சு பாசுவின் கணவர் பிகாஷ் பாசு பள்ளி ஆசிரியர் ஆவார்.
அரசியல்
[தொகு]மஞ்சுவின் கணவர் 2000ஆம் ஆண்டில் தேர்தலுக்கு முன்னதாக கொல்லப்பட்டதை அடுத்து, மஞ்சு தீவிர அரசியலில் நுழைந்தார்.[2][3]
மஞ்சு பாசு 2001-ல் நோபராவிலிருந்து திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இத்தேர்தலில் மஞ்சு வெற்றி பெற்றார்.[4] இருப்பினும், இவர் 2006-ல் தோல்வியடைந்தார்.[5] ஆனால் 2011-ல் மீண்டும் வென்றார்.[6] 2016 பொதுத் தேர்தலில் மீண்டும் தொகுதியை இழந்தார். இத்தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் மதுசூதன் கோஷ் வெற்றி பெற்றார். மீண்டும், 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இவர் தனது நெருங்கிய போட்டியாளரான பாஜகவின் சுனில் சிங்கைத் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Watch Reporter". My Neta. Retrieved 19 August 2014.
- ↑ "Dozen dose of dynasty on Trinamul list". The Telegraph, 19 March 2011. Archived from the original on 21 August 2014. Retrieved 19 August 2014.
- ↑ "13-year-old shot dead in front of pandal". The Telegraph, 26 October 2000. Archived from the original on 12 November 2008. Retrieved 19 August 2014.
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 19 August 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 19 August 2014.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 19 August 2014.