மஞ்சுள வெடிவர்த்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சுள வெடிவர்த்தன (Manjula Wediwardena) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட சிங்களக் கவிஞர். இலங்கைத் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பவர். இனவாதத்துக்கு எதிராய் குரல் கொடுப்பவர். இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்ததால் இலங்கை அரசால் கொலைமிரட்டலுக்கு ஆளானவர். தற்சமயம் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார்.

மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு இலங்கை அரசால் 2000 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது[1].

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுள_வெடிவர்த்தன&oldid=3285232" இருந்து மீள்விக்கப்பட்டது