மசுகுவா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வோல்கா ஆறையும், மாஸ்குவா ஆறையும் மாஸ்கோ கால்வாய் இணைக்கிறது.

மாசுகுவா ஆறு (Moskva River, உருசியம்: река Москва, Москва-река), அல்லது மாசுகோ ஆறு (Moscow River) என்பது உருசியாவின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது உருசியத் தலைநகர் மாசுகோ நகரின் மேற்கில் கிட்டத்தட்ட 90 மைல்கள் தொலைவில் உற்பத்தியாகி, மாஸ்கோவின் மத்தியினூடாக, கிழக்கே சுமோலியான்ஸ்க், மற்றும் மாஸ்கோ வட்டம் ஆகியவையூடாக செல்கிறது. மாஸ்கோவின் தென்கிழக்கே 70 மைல்கள் தொலைவில் வோல்கா ஆற்றின் கிளைகளில் ஒன்றான ஓக்கா ஆற்றில் கலந்து, பின்னர் காசுப்பியன் கடலில் கலக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுகுவா_ஆறு&oldid=3514112" இருந்து மீள்விக்கப்பட்டது