மக்ஸ் ஏர்ண்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்ஸ் ஏர்ண்ஸ்ட்
AAA inverobe 11954-2.jpg
1948 இல் மக்ஸ் ஏர்ண்ஸ்ட்டும் டொரொத்தியா டானிங்கும்
தேசியம்ஜெர்மன்
அறியப்படுவதுஓவியம், சிற்பம், கவிதை
அரசியல் இயக்கம்டாடா, அடிமன வெளிப்பாட்டியம்

மக்ஸ் ஏர்ண்ஸ்ட் (2 ஏப்ரல் 1891 - 1 ஏப்ரல் 1976) ஒரு ஜெர்மன் ஓவியரும், சிற்பியும், வரைகலை ஓவியரும், கவிஞரும் ஆவார். இவர் டாடாயியம், அடிமன வெளிப்பாட்டியம் என்பவற்றின் முக்கிய பிரதிநிதியாக விளங்குகிறார்.

இளமைக்காலம்[தொகு]

மாக்ஸ் ஏர்ண்ஸ்ட் ஜெர்மனியில் கொலோனுக்கு அருகில் உள்ள புரூயில் என்னுமிடத்தில் பிறந்தார். 1909 ஆம் ஆண்டில் தத்துவம் கற்பதற்காக பொன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எனினும் விரைவிலேயே அவர் அங்கிருந்து விலகினார். அவ்வாண்டிலேயே அவர் ஓவியங்களை வரையத் தொடங்கினார். ஆனாலும் அவர் எங்கும் முறையான ஓவியப் பயிற்சி பெறவில்லை. முதலாம் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் படையில் இணைந்து பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ஸ்_ஏர்ண்ஸ்ட்&oldid=2225886" இருந்து மீள்விக்கப்பட்டது