மக்மூத் பெகடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் மக்முத் ஷா
குசராத்தின் சுல்தான்
ஆட்சிக்காலம்25 மே 1458 – 26 நவம்பர் 1511
முன்னையவர்தாவூத் ஷா
பின்னையவர்இரண்டாம் முசாபர் ஷா
பிறப்பு1445
அகமதாபாது
இறப்பு23 நவம்பர் 1511
அகமதாபாத்
புதைத்த இடம்
சர்கெஜ் ரோசா, அகமதாபாத்
துணைவர்ரூபமஞ்சரி, கிராபாய்
குழந்தைகளின்
பெயர்கள்
கலீல் கான் (இரண்டாம் முசாபர் ஷா), முகமது காலா, அபா கான், அகமது கான்
பெயர்கள்
அப்துல் பத் நாசிர் -உத்-தின்-மக்முத் ஷா
அரசமரபுமுசாபரித்து வம்சம்
தந்தைஇரண்டாம் முசாபர் ஷா
தாய்பீபி முக்லி
மதம்சுன்னி இசுலாம்

சுல்தான் மக்மூத் பெகடா அல்லது முதலாம் மக்மூத் ஷா (Mahmud Begada or Mahmud Shah I) ( ஆட்சி. 25 மே 1458 – 23 நவம்பர் 1511 ) குசராத்து சுல்தானகத்தின் மிக முக்கியமான சுல்தான் ஆவார்.[1] இளம் வயதிலேயே அரியணையில் அமர்ந்த இவர், பாவாகத் மற்றும் ஜூனாகத் கோட்டைகளை வெற்றிகரமாக போர்களில் கைப்பற்றினார். [2] இது இவருக்கு பெகடா என்ற பெயரைக் கொடுத்தது. சம்பானேரை தலைநகராக நிறுவினார்.

இரண்டாம் குத்புத்தீன் அகமத் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, பிரபுக்கள் முதலாம் அகமத் ஷாவின் மகனான இவரது மாமா தாவூத் கானை அரியணையில் அமர்த்தினர். ஆனால் அரச குலத்தில் பிறக்காததால் உயர் பதவிகளுக்கு நியமித்து முறையற்ற செயலாகக் கருதப்பட்டது. ஏழு அல்லது இருபத்தேழு நாட்களுக்குள், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 1459 இல் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் பதே கான், முதலாம் மக்மூத் ஷா என்ற பட்டத்துடன் பதின்மூன்று வயதில் அரியணையில் அமர்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 114–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  2. Chandra, Satish (2007). History of Medieval India: 800-1700. Orient BlackSwan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8125032267. https://books.google.com/books?id=qHnHHwAACAAJ. பார்த்த நாள்: 2020-09-21. 
  3. James Macnabb Campbell, தொகுப்பாசிரியர் (1896). "II. Áhmedábád Kings. (A.D. 1403–1573.)". History of Gujarát. Gazetteer of the Bombay Presidency. I. Part II.. The Government Central Press. பக். 244–251. http://www.gutenberg.org/files/54652/54652-h/54652-h.htm.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்மூத்_பெகடா&oldid=3835202" இலிருந்து மீள்விக்கப்பட்டது