மகா பம்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகா பம்படம் (Maha Pambata), அல்லது 'பெரிய கல்' என்பது தமிழ் மன்னன் எல்லாளனுக்கு (கி.மு .235 - கிமு 161) சொந்தமான ஒரு பிரபலமான போர் யானையாகும்.

இலங்கையில், மன்னர்கள் தங்கள் எதிரிகளுடனான தனிச்சமருக்குச் செல்லும்போது போர் யானைகளைப் பயன்படுத்துவது பழங்காலத்து வழக்கமல்ல. [1] தனது போர் யானையான கந்துலா மீது சவாரி செய்த போரிட்ட துட்டகைமுனுக்கு போரில் மகா பம்படம் என்ற புகழ்பெற்ற யானையின் மீது ஏறி எல்லாளன் போரிட்டான். [2]

எல்லாளனுடனான போர்[தொகு]

எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகமுனுவின் படைகள் எல்லாளன் படையிடம் தோற்று பின்வாங்க ஆரம்பித்தன , போரில் தோல்வியை தவிர்ப்பதற்காக துட்டகைமுனு சாதுரியமாக, எல்லாளனை ஒற்றைச்சமருக்கு அழைக்க, யுத்த தர்மத்தின் படி எல்லாளனும் அதை ஏற்று போர் புரிந்தான், நீண்ட நேர சமருக்கு பிறகு, வயோதிகனான எல்லாளனை, துட்டகைமுனு வெற்றிபெற்றான், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி, அவனுக்கு சிலை எழுப்பி, மரியாதை செய்தான்

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Lankan Elephants
  2. "War Against King Elara". 28 May 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பம்படம்&oldid=3183572" இலிருந்து மீள்விக்கப்பட்டது