மகாகபி ஜாதகா
மகாகபி ஜாதகா என்பது ஜாதகக் கதைகள் அல்லது புத்தரின் முற்பிறவி வாழ்க்கை கதைகளில் ஒன்றாகும், அவர் போதிசத்துவராக இருந்தபோது, குரங்குகளின் ராஜாவாக இருந்தார் [2]
கதை
[தொகு]போதிசத்வர் குரங்காக பிறந்து 80,000 குரங்குகளை ஆண்ட ராஜாவாக இருந்த பிறவியின் கதையாக இது அமைந்துள்ளது. அவர்கள் கங்கைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வாழ்ந்து, ஒரு பெரிய மாமரத்தின் பழங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பெனாரஸின் மன்னர் பிரம்மதத்தர், சுவைமிக்க அந்த மாம்பழங்களை தனக்காகவே மட்டுமே வேண்டும் என விரும்பி அங்கு வாழ்ந்து வந்த அனைத்து விலங்குகளையும் கொல்வதற்கு தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். அதன்படி அந்த வீரர்களும் மரத்தைச் சுற்றி வளைத்தனர், ஆனால் போதிசத்துவர் தனது முழு உடலையும் நிலத்திற்கும் ஓடைக்கும் நடுவாக ஒரு பாலமாக கிடத்தி அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக வெளியேற உதவினார்.
போதிசத்தரின் கூடவே இருந்த குரங்குகளில் ஒன்று பொறாமை மிக்க மற்றும் பொல்லாத குணமுடையதும் அவரது உறவினருமான தேவதத்தா தான், இந்த சமயமே தனது எதிரியான போதிசத்தரை அழிக்க ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்து, போதிசத்துவரின் முதுகில் குதித்து அவரது இதயத்தை உடைத்தது.
போதிசத்துவரின் தன்னலமற்ற நற்செயல்களை அறிந்து தனது செயலுக்காக வருந்திய மன்னன், அவர் இறக்கும் வேளையில் மிகுந்த கவனத்துடன் அவரைக் கவனித்து, இறப்பிற்கு பின்னர் அவருக்கு அரச மரியாதைகளை அளித்தான். [3]
பர்ஹுட்டில் உள்ள சித்தரிப்பு
[தொகு]இந்த ஜாதகக் கதையில், புத்தர், ஒரு குரங்கு ராஜாவாக முந்தைய அவதாரத்தில், தன்னலமற்ற தியாகத்துடன் தனது சொந்த உடலை ஒரு பாலமாக வழங்குகிறார், இதன் மூலம் தனது சக குரங்குகள் தங்களைத் தாக்கும் மனித ராஜாவிடம் இருந்து தப்பிக்க முடியும். ஆற்றின் ஒரு குறுகிய பகுதி, அதன் குறுக்கே குரங்குகள் தப்பி ஓடுகின்றன, மீன் வடிவமைப்புகளால் குறிக்கப்படுகிறது. அதற்கு நேர் கீழே, அவர்களை தாக்க வந்துள்ள மனிதர்கள் அவர் விழும்போது அவரைப் பிடிக்க ஒரு போர்வையைப் பிடித்துள்ளனர். அந்த கல்வெட்டின் மிகக் கீழே கதையின் தொடர்ச்சியான மீட்கப்பட்ட புத்தர் ராஜாவுக்கு உபதேசிப்பதை குறித்துள்ளனர்.
சாஞ்சியில் உள்ள சித்தரிப்பு
[தொகு]சாஞ்சியிலிருந்து (ஸ்தூபி எண் 1, மேற்கு வாசல்) நிவாரணப் பலகையின் கீழே, மேலிருந்து கீழாக, கங்கை நதி பாய்கிறது. இடதுபுறம், உச்சியில், இரண்டு குரங்குகள் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மாமரம் உள்ளது, அதே நேரத்தில் குரங்குகளின் ராஜா ஆற்றின் குறுக்காக மாமரத்திலிருந்து எதிர்க்கரை வரை ஒரு பாலம் போல நீண்டுள்ளார், மேலும் அவரது உடல் மீது ஏற்கனவே சில குரங்குகள் தப்பி ஓடி கொண்டிருக்கிறது . அதற்க்கு பின்பாக சில பாறைகள் மற்றும் காடுகள் காணப்படுகின்றன.
சித்தரிப்பின் கீழ் பகுதியில், இடதுபுறத்தில், ராஜா பிரம்மதத்தன் குதிரையில் தனது வீரர்களுடன் இருக்கிறார், அவர்களில் ஒருவர் வில் மற்றும் அம்புகளுடன் போதிசத்துவரை நோக்கி மேல்நோக்கி குறிவைத்துள்ளார். சித்தரிப்பின் மேல் பகுதியில், அரசனின் உருவம், மா மரத்தின் அடியில் அமர்ந்து, இறக்கும் போதிசத்துவருடன் உரையாடும் நிலையில் மீண்டும் காணப்படுகிறது, ஜாதகக் கதையின்படி, ஒரு தலைவரின் கடமைகள் குறித்து புத்தர் ராஜாவுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார் எனக்கூறப்படுகிறது .
மேற்கோள்கள்
[தொகு]ஆதாரம்
[தொகு]- 1918 இல் இந்தியாவில் வெளியிடப்பட்ட "சாஞ்சிக்கு ஒரு வழிகாட்டி" பொது டொமைன் உரை, ஜான் மார்ஷல் (1876-1958) [1]