உள்ளடக்கத்துக்குச் செல்

மகபத் மக்பரா வளாகம்

ஆள்கூறுகள்: 21°31′38″N 70°27′36″E / 21.5272°N 70.46°E / 21.5272; 70.46
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகபத் மக்பரா வளாகம்
மகபத் மக்பரா வளாகம்
ஆள்கூறுகள்21°31′38″N 70°27′36″E / 21.5272°N 70.46°E / 21.5272; 70.46
இடம்ஜூனாகத், குசராத்து, இந்தியா
வகைகல்லறை
துவங்கிய நாள்1878
முடிவுற்ற நாள்1892
அர்ப்பணிப்புஇரண்டாம் மகபத் கான்

மகபத் மக்பரா (Mahabat Maqbara) மற்றும் பகாவுதீன் மக்பரா(Bahauddin Maqbra) என்பது இந்தியாவின் குசராத்தின் ஜூனாகத்தில் உள்ள கல்லறைகள் ஆகும். இவை முறையே 1892 மற்றும் 1896 இல் முடிக்கப்பட்டு, ஜுனாகத் மாநிலத்தின் நவாப் இரண்டாம் மகபத் கான் மற்றும் அவரது மந்திரி பகாவுதீன் உசைன் பார் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

பாபி வம்சத்தின் நவாப்கள் முந்தைய ஜூனாகத் மாநிலத்தை ஆண்டனர். மகபத் மக்பராவின் கட்டுமானம் 1878 இல் இரண்டாம் நவாப் மகபத் கான் (1851-82) அவர்களால் தொடங்கப்பட்டது. 1892 இல் மூன்றாம் நவாப் பகதூர் கான் (1882-92) ஆட்சியின் போது முடிவடைந்தது. இதில் இரண்டாம் மகபத் கானின் கல்லறை உள்ளது. [1] [2] [3] இது குசராத் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1965இன் [3] கீழ் ஒரு மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

பகாவுதீன் மக்பரா

1891-1896 ஆம் ஆண்டு இரண்டாம் மகபத் கானின் கல்லறைக்கு அருகே வடக்கில் அவரது அமைச்சர் சேக் பகாவுதீன் உசைன் பார் என்பவரது சொந்த நிதியில் கட்டப்பட்டது. இது பகாவுதீன் மக்பரா அல்லது வசீரின் மக்பரா என்று அழைக்கப்படுகிறது. [1][4][3]

கட்டிடக்கலை[தொகு]

சுற்றிலும் முறுக்கு படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு மினாரெட்.

இந்த கல்லறைகள் கணிசமான ஐரோப்பிய ( கோதிக் கட்டிடக்கலை ) செல்வாக்குடன் இந்திய-இஸ்லாமிய பாணிகளின் (முக்கியமாக குசராத் சுல்தானியம் மற்றும் முகலாயக் கட்டிடக்கலை ) கலவையாக அறியப்படுகின்றன.[2][5]

இந்த கல்லறைகளின் உள் மற்றும் வெளிப்புற முகப்பில் செதுக்கல்கள் மற்றும் மஞ்சள் கலந்த வெளிர் பழுப்பு நிற வெளிப்புறத்துடன் வளைவுகள் உள்ளன. வெங்காய வடிவ குவிமாடங்கள், பிரஞ்சு சாரளங்கள், சிற்பங்கள், பளிங்கு வேலைப்பாடுகள் மற்றும் வெள்ளி கதவுகள் உள்ளன. இந்த சமாதிகளில் ஒன்றின் நான்கு பக்கங்களிலும் உள்ள மினாரட்டுகளை சுற்றி முறுக்கு படிக்கட்டுகள் உள்ளன.[3] ஜமா மசூதி ஒன்று இதே போன்ற கட்டிடக்கலை பாணியுடன் அருகில் அமைந்துள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maqbara, Junagadh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 "Junagadh's Mahabat Maqbara is a stunner to behold" (in ஆங்கிலம்). 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  2. 2.0 2.1 The Guide to the Architecture of the Indian Subcontinent.
  3. 3.0 3.1 3.2 3.3 "Unlamented, let me die" (in en-IN). 2013-04-27. https://www.thehindu.com/features/magazine/unlamented-let-me-die/article4653210.ece. 
  4. "Mahabat Maqbara, the unsung architectural treasure of Junagadh". Times of India Travel. 2019-02-08. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
  5. Abram, David; Edwards, Nick; Ford, Mike; Jacobs, Daniel; Meghji, Shafik; Sen, Devdan; Thomas, Gavin (2013-10-01). The Rough Guide to India. Rough Guides UK. p. 667. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4093-4261-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபத்_மக்பரா_வளாகம்&oldid=3813505" இலிருந்து மீள்விக்கப்பட்டது