போல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போல்டன் ( Bolton ) [1] என்பது ஒரு நகரமாகும்.வடமேற்கு இங்கிலாந்தின் மன்செஸ்டரிலுள்ள முன்னாள் ஆலை நகரமான போல்டன் 14 ஆம் நூற்றாண்டில் பிளெமிஷ் நெசவாளர்கள் இப்பகுதியில் குடியேறியதில் இருந்து துணி உற்பத்தி மையமாக இருந்து கம்பளி மற்றும் பருத்தி நெசவு பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தினர். நகரத்தின் நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சி பெரும்பாலும் தொழில்துறை புரட்சியின் போது துணி உற்பத்தியை அறிமுகப்படுத்தியது. போல்டன் 19 ஆம் நூற்றாண்டின் திடீர் வளர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நகரமாகும். 1929 இல் 216 பருத்தி ஆலைகள் மற்றும் 26 வெளுத்தல் மற்றும் சாயமிடுதல் வேலைகள் ஆகியவற்றைக் கொண்டு அதன் உச்சத்தில் இருந்தது. இது உலகின் நூற்பாலையின் மிகப்பெரிய மற்றும் அதிக உற்பத்தி மையங்களில் ஒன்றாக அமைந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு பிரித்தன் பருத்தித் தொழில் வெகுவாகக் குறைந்தது. 1980களில் பருத்தி உற்பத்தி கிட்டத்தட்ட போல்டனில் நிறுத்தப்பட்டது.

போல்டன், வெஸ்ட் பென்னைன் மூர்சுக்கு அருகில், மன்செஸ்டருக்கு வடமேற்கே 10 மைல் (16 கி.மீ) தொலைவில் உள்ளது. இது பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. அவை ஒன்றாக போல்டன் பெருநகரத்தை உருவாக்குகின்றன. அவற்றில் போல்டன் நிர்வாக மையமாகும். போல்டன் நகரத்தின் மக்கள் தொகை 139,403 என்ற அளவில் உள்ளது. அதே நேரத்தில் பரந்த பெருநகர மக்கள் தொகை 262,400 பேராகும். வரலாற்று ரீதியாக இலங்காசயரின் ஒரு பகுதியாக, போல்டன் லே மூர்ஸ் என்று அழைக்கப்படும் மூர்லாண்டில் ஒரு சிறிய குடியேற்றமாக உருவானது. ஆங்கில உள்நாட்டுப் போரில், இந்த நகரம் ஒரு தீவிரமான முடியாட்சியின் கொள்கையை ஆதரிக்கும் பிராந்தியத்தில் ஒரு நாடாளுமன்ற புறக்காவல் நிலையமாக இருந்தது. இதன் விளைவாக 1644 இல் ரைன் இளவரசர் ரூபர்ட் தலைமையிலான 3,000 முடியாட்சியின் கொள்கையை ஆதரிக்கும் பிராந்தியத் துருப்புக்கள் தாக்கப்பட்டன. போல்டன் படுகொலை என அறியப்பட்ட இதில், 1,600 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 700 பேர் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.

போல்டன் வாண்டரர்ஸ் கால்பந்து சங்கம் போல்டன் மைதான பல்கலைக்கழகத்தில் உள்ளூர் விளையாட்டுகளை விளையாடி வருகிறது. உலகக் குத்துச் சண்டை அமைப்பு நடத்தும் குறைந்த எடைப்பிரிவுப் போட்டியின் வெற்றியாளர் அமீர் கான் இந்த நகரில் பிறந்தார். கலாச்சார ஆர்வங்களில் ஆக்டோகன் அரங்கம் மற்றும் போல்டன் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவை அடங்கும். அத்துடன் பொது நூலகங்கள் சட்டம் 1850 க்குப் பிறகு நிறுவப்பட்ட ஆரம்பகால பொது நூலகங்கம் ஒன்றும் இதில் அடங்கும்.

தொழில்துறை புரட்சி[தொகு]

உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களான இரிச்சர்ட் ஆர்க்விரைட் மற்றும் சாமுவேல் கிராம்ப்டன் ஆகியோரால் குடிசை நூற்பு, நெசவு மற்றும் நூற்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டில் துணித்துறையின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கிராம்ப்டன், ஆல் ஐத் வூட்டில் வசித்து வந்தபோது, 1779 இல் பருத்தி மற்றும் பிற இழைகளை சுழற்ற பயன்படும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். சுற்றியுள்ள மூர்லாந்தை குரோல் நதிக்குள் ஓடும் நீரோடைகள் இந்த பகுதியின் ஒரு அம்சமாக இருந்து வெளுக்கும் பணிகளுக்கு தேவையான நீரை வழங்கின. [2] குளோரின் பயன்படுத்தி வெளுக்கும் பணி 1790 களில் ஐன்ஸ்வொர்த் என்பவரால் கில்லிவெல் வெளுப்பு நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. போல்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இர்வெல் பள்ளத்தாக்கில் இலிவர் பேங்க் வெளுப்பு நிறுவனம் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட வெளுக்கும் நிறுவனங்கள் இருந்தன. .[3] ஆரம்பகால ஆலைகள் பாரோ பாலத்தில் இருந்ததைப் போல நீரோடைகள் மற்றும் நதிகள் அருகே அமைந்திருந்தன. ஆனால் நீராவி சக்தி பெரிய பல மாடி ஆலைகள் மற்றும் அவற்றின் புகைபோக்கிகள் போல்டனின் வானலைகளில் ஆதிக்கம் செலுத்தியது, அவற்றில் சில இன்று உயிர்வாழ்கின்றன.[4]

.]]
குளிர்கால மலையிலிருந்து எடுக்கப்பட்ட வடமேற்கில் இருந்து போல்டன் மற்றும் சுற்றுப்புறங்களின் பரந்த காட்சி.]].

குறிப்புகள்[தொகு]

  1. Shorrocks (1999).
  2. Ashmore (1982).
  3. "Bolton". spinningtheweb.org.uk. Archived from the original on 3 October 2006. பார்க்கப்பட்ட நாள் 6 December 2009.
  4. Lewis (1835)

நூற்பட்டியல்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bolton
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்டன்&oldid=3582200" இலிருந்து மீள்விக்கப்பட்டது