போராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போராக்
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)அசாம், இந்தியா
புரவலர்கள்மிசிங் இன மக்கள்

போராக் ( அசாமி : পৰাগ ) என்பது அஸ்ஸாமின் மைசிங் இன மக்களால் அறுவடைக்குப் பிறகு ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.[1][2] நூதன முரசு கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் பக்கத்து கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள்.[சான்று தேவை]  அவர்கள் தங்கள் திறமைகளின் மூலம் அந்த இடத்தில் கூடியிருப்பவர்களை மகிழ்விப்பர். இது பாடல்கள் மற்றும் நடனங்களின் திருவிழா என அறியப்படுகிறது. இது நாரா சிங்கா பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.

முக்கியத்துவம்[தொகு]

பொதுவாக மிரி இனத்தின் இளைஞர்கள், பயிர்களை அறுவடை செய்த பின்னர், கட வுள், தாய் பூமி மற்றும் அவர்களின் முன்னோர்களை திருப்திப்படுத்துவதற்காகவும், அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். மேலும் இந்தத் திருவிழாவின் போது சிறுவர் சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்து பாடல், நடனம் ஆடுவதல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள்.அவ்வாறு பாடப்படும் பாடல்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் நடனங்கள் விவசாயப் பணிகளின் வழக்கமான அசைவுகளை பிரதிபலிப்பாகவும் அமைந்திருக்கும்.

ஏற்பாடு[தொகு]

அங்குள்ள பழங்குடியினரின் இளைஞர் அமைப்பு இந்தத் திருவிழாவை தாகிக் என அழைக்கப்படும் முறை சார் , மரபார்ந்த முறையில் நடத்துகிறது திருவிழாவினை சிறப்பாக நடட்துவதற்காக இவர்கள் சிலரை அதிகாரிகளாக நியமிக்கின்றனர். பண்டைய காலத்தில் மிபூ என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போதுஅவருக்கு பதிலாக மிகம் போரா மற்றும் பார் புவரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருந்து[தொகு]

குறைந்தது நான்கு முதல் ஐந்து பன்றிகள் பலியிடப்பட்டு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதிக அளவிலான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படுகிறது. திருவிழாவில் அருகில் இருக்கும் கிராமத்தினர்களை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்கிறது. அவர்கள் மினாம்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் கும்ராக் எனும் வகையிலான நடனத்துடன் மோருங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இந்தத் திருவிழா பொனு நுனம் எனப்படும் பிரார்த்தனை நடனத்துடன் முடிகிறது.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Bronze |Points: 20 |, Posted Date: 29 Aug 2011 |Updated: 15-May-2020 |Category: Assam |Author: Spider4 |Member Level: (2011-08-29). "Porag Festival of Assam". Techulator (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05. {{cite web}}: |first= has generic name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. "Assam: Po-Rag, reunion festival celebrated with fervour at Lakhimpur". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போராக்&oldid=3069553" இலிருந்து மீள்விக்கப்பட்டது