போரம் பீசா பேரங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரம் பீசா பேரங்காடி
இருப்பிடம்:பந்தேசுவர் சாலை, மங்களூர், கருநாடகம், இந்தியா
திறப்பு நாள்28 மே 2014[1]
உருவாக்குநர்பிரசுட்டீச் குழுமம், பீசா குழுமம் மற்றும் கேப்பிட்டல் பேரங்காடி
கூரை எண்ணிக்கை4
மொத்த வணிகத் தளப் பரப்பளவு660,000 sq ft (61,000 m2)[2]
தள எண்ணிக்கை5
வலைத்தளம்www.forummalls.in/forum-fiza

போரம் பீசா பேரங்காடி (Forum Fiza Mall) கர்நாடகாவின் நான்காவது பெரிய பேரங்காடியாகும். இது மங்களூருர் நகரின் பாண்டேசுவர் சாலையில் அமைந்துள்ளது மங்களூர் மத்திய ரயில் நிலையத்திலிருந்தும் 1 கி.மீ தொலைவு பயணம் செய்து இங்கு செல்லவியலும். போரம் பேரங்காடி என்று பிரபலமாக அறியப்படும் இப்பேரங்காடி 2014 ஆம் ஆண்டு மே மாதம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. [1] இங்கு விற்பனையோடு, உணவு விடுதி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.

மங்களூரு, ஃபோரம் பிசா மாலில் இருந்து பாண்டேஷ்வர் வானலை

நிகழ்வுகள்[தொகு]

  • 2016 ஆம் ஆண்டு இவர்கள் உலகின் மிகப்பெரிய நுண்கலை பட்டறை ஒன்றை நடத்தினர், அதில் 8000 எண்னிக்கைக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தனர்.[3]
  • 2017 ஆம் ஆன்டு செப்டம்பர் மாதத்தில் போரம் பீசா அமைப்பு ஊதா நிற ஓட்டம் என்ற நிகழ்வை நடத்தியது.[4] [5] இந்த நிகழ்வு 4 நகரங்களில் 5 போரம் பேரங்காடிகளில் நடந்தது. [6] அல்சைமர் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அது தொடர்பான ஆராய்ச்சிக்கு பணம் திரட்டுவதற்கும், மனநல பிரச்சினைகளைச் சுற்றியுள்ள களங்கத்தை அகற்றுவததும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தது.
  • இவற்றைத்தவிர உலகளாவிய அளவில் இருக்கும் வர்த்தக அடையாளம் கொண்ட கார்களின் கண்காட்சி ஒன்றும் நிகழ்ந்தது. [7]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Forum Fiza Mall"."Forum Fiza Mall".
  2. "Forum Fiza Mall". Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  3. "'World's largest micro art workshop' in the city on november 12". The Times of India. 26 October 2016. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/Worlds-largest-micro-art-workshop-in-the-city-on-november-12/articleshow/55061139.cms. 
  4. "Major drive to create mental health awareness". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.
  5. "Purple Run for Alzheimer’s awareness on Sept 24 - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/purple-run-for-alzheimers-awareness-on-sept-24/articleshow/60314035.cms. 
  6. "Mangaluru: Forum Mall to host 'Purple Run' on Sep 24 to create Alzheimer's awareness". பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.
  7. "Mangaluru: Car enthusiasts flock to Forum Fiza Mall as Auto Carnival begins". பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரம்_பீசா_பேரங்காடி&oldid=3712619" இலிருந்து மீள்விக்கப்பட்டது