போதைமலை

ஆள்கூறுகள்: 11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E / 11.54250; 78.24111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போதைமலை என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள ஒரு மலையாகும். இந்தமலை கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ளது. [1]

போதைமலை மலைத்தொடர்
உயர்ந்த இடம்
உயரம்1,100 m (3,600 அடி)
ஆள்கூறு11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E / 11.54250; 78.24111
பரிமாணங்கள்
நீளம்19.3121 km (12.0000 mi) E-W
அகலம்9.3342 km (5.8000 mi) N-S
பரப்பளவு180.2632 km2 (69.6000 sq mi)
பெயரிடுதல்
தாயகப் பெயர்போதைமலை Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
அமைவிடம்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், இராசிபுரம் வட்டம்
மூலத் தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
Biomeமலைக்காடு

இந்த மலையில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடுக்காடு, தெற்குகாடு, குறிஞ்சூர், கீழூர், மேலூர், கெடமலை போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த மலையில் பிரதானமான தொழிலாக விவசாயம் இருந்துவருகிறது. இந்த மலைக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இப்பகுதி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை இங்கு தலைச்சுமையாகவே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.[2] இதனால் இந்த மலைக்கு சாலை வசதி ஏற்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "700 மீட்டர் உயரத்தில் வசித்த போதைமலை குள்ளர்கள்: அடையாளங்களை அழித்து வரும் கும்பலால் அதிர்ச்சி". செய்தி. தினமலர். 21 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "ஓட்டுப் பெட்டியை தலையில் சுமக்கும் அவலம்". கட்டுரை. தண்டோரா. 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதைமலை&oldid=3577941" இலிருந்து மீள்விக்கப்பட்டது