போட்டாலேக்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டாலேக்கைட்டு
Botallackite
கோர்ன்வால் சுரங்கத்தில் கிடைத்த போட்டாலேக்கைட்டு
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுCu2(OH)3Cl
இனங்காணல்
படிக இயல்புசெதிள் வடிவ இடைமுகப்பு படிகம்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{100} இல் சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமைமென்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி3.6
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα= 1.775, nβ= 1.800, nγ= 1.846
இரட்டை ஒளிவிலகல்δ = 0.071
பலதிசை வண்ணப்படிகமைபலவீனமான – நீலப் பச்சை நிழல்
நிறப்பிரிகைr > v, வலிமை
மேற்கோள்கள்[1][2][3]

போட்டாலேகைட்டு (Botallackite) என்பது Cu2(OH)3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரத்தின் இரண்டாம் நிலைக் கனிமமான இது இங்கிலாந்திலுள்ள கோர்ன்வால் பகுதியிலுள்ள போட்டாலேகைட்டு சுரங்கத்தில் கிடைத்ததால் இப்பெயர் பெற்றது. அட்டாகேமைட்டு, பாராடாகேமைட்டு மற்றும் கிளினோ அட்டாகேமைட்டு கனிமங்களுடன் பல்லுருவமைப்பைக் கொண்டுள்ளது [1].

ஒற்றைச்சரிவச்சுப் படிகத் திட்ட்த்தில் போட்டாலேகைட்டு படிகமாகிறது. மலைப்பச்சை நிறம் அல்லது பச்சை நிறத்தில் தனித்தன்மையான சரி பிளவு தோற்றத்தை வெளிப்படுத்துகிறது .[1].

கண்டுபிடிப்பும் தோற்றமும்[தொகு]

இங்கிலாந்திலுள்ள கோர்ன்வால் பகுதியிலுள்ள போட்டாலேகைட்டு சுரங்கத்தில் 1865 ஆம் ஆண்டு முதன்முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. கிடைத்த இடத்தின் பெயர் கனிமத்திற்கு வைக்கப்பட்டது [1] தாமிரப்படிவுகள் காலநிலை மற்றும் உப்பு நீர் விளைவுகளால் போட்டாலேகைட்டு கனிமமாக உருவாகிறது [1]. சல்பைடு கனிமங்கள் கடல்நீருடன் வினைபுரிவதால் உருவாகும் கரும்புகை படிவுகளில் இது உருவாகிறது. கடல்நீரில் வெளிப்படும் தாமிரத்தைக் கொண்டுள்ள கண்ணாடி போன்ற கனிமத்திலும் போட்டாலேக்கைட்டு தோன்றுகிறது. அட்டாகேமைட்டு, பராட்டாகேமைட்டு, புரோச்சேன்டைட்டு, கன்னெலைட்டு மற்றும் கிப்சம் போன்ற கனிமங்களுடன் கலந்து இக்கனிமம் சேர்ந்து காணப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டாலேக்கைட்டு&oldid=2726549" இலிருந்து மீள்விக்கப்பட்டது