போக்கர் (சீட்டு ஆட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"Texas hold 'em" என்ற புகழ்பெற்ற போக்கர் ஆட்டம்

போக்கர் (Poker) மேலை நாடுகளில் புகழ் பெற்ற சீட்டாட்டம். சூதாடப் பயன்படும் இவ்வகை ஆட்டங்களில் வெல்ல முக்கிய அமசங்கள் - “கை” (இல் உள்ள சீட்டுகளின்) மதிப்பும், எதிராளியை ஏய்க்கும் திறனும். போக்கர் ஆட்டங்களுள் பல வகைகள் உள்ளன. ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, ஒரு “கை” யில் உள்ள சீட்டுகளின் எண்ணிக்கை, பந்தயம் வைக்கும் முறை ஆகியவை கொண்டு அவை வகைப்படுத்தப்படுகின்றன.[1]

வரலாறு[தொகு]

போக்கரின் மூல ஆட்டத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பண்டைய பாரசீகத்தின் ஆஸ் நாஸ் (As Nas) ஆட்டமே இதன் ஆதாரம் என்று ஒரு சாரரும், ஃபிரான்ஸ் நாட்டின் போக் (poque) ஆட்டமே இதன் ஆதாரம் என்று இன்னொரு சாரரும் கருதுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றண்டில் போக்கர் வட அமெரிக்காவில் பரவத்தொடங்கியது. அப்போது புழக்கத்திலிருந்த சீட்டாட்டங்களை விட வித்தியாசமான பந்தய முறையே இதன் வேகமான வளர்ச்சிக்கான காரணமாகக் கூறப்டுகிறது. இருபதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் மிகவும் புகழ் பெற்ற சீட்டாட்டங்களில் ஒன்றானது. இணையத்திலும் இவ்வாட்டம் வளர்ச்சி அடைந்தது. தற்போது, தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவு புகழும் செல்வாக்கும் பெற்றுள்ளது.[2]

ஆட்ட விதிமுறைகள்[தொகு]

போக்கர் விளையாடுபவர்களுக்கு முதலில் சில சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. ஆட்டக்காரர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் “கை” மதிப்பின் அடிப்படையில் பந்தயம் கட்டுகின்றனர். ஒரு ஆட்டக்காரரின் “கை” மற்றவருக்கு தெரியாது. அவர்களுள் அதிகபடியான பந்தயம் கட்டுகிறவர் கட்டும் அளவுக்கு பிற ஆட்டக்காரர்களும் பந்தயம் கட்ட வேண்டும், இல்லையெனில் அது வரை வைத்த பந்தயப் பணத்தை களத்தில் விட்டு விட்டு அச்சுற்றில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். அதிகமாக பந்தயம் வைத்தவர் அவரது “கை” பலத்தை மிகைபடுத்தி ஏய்க்கின்றார் என்று தோன்றினால், அவரது கையை காட்டச் சொல்லலாம். அவ்வாறு காட்டுகையில், யாருடைய கைக்கு பலம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டு, வென்றவருக்கு களப்பணம் முழுதும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பல சுற்றுகள் நடக்கும். கையிருப்பு பணம் தீர்ந்த ஆட்டக்காரர், ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வார். இறுதியில் ஒரே ஆட்டக்காரர் மீதியிருக்கும் வரை ஆட்டம் தொடரும்.

போக்கர் வகைகள்[தொகு]

ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, எத்தனை முறை சீட்டளித்தல் நடக்கிறது, “கை” யில் எத்தனை சீட்டுகளை மற்ற ஆட்டக்காரர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதை பொறுத்து போக்கர் ஆட்டங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஹோல்ட், டிரா, கம்யூனிடி கார்டு ஆகியவை முக்கிய போக்கர் வகைகள். இவை தவிர இன்னும் பல வகை போக்கர் ஆட்டங்களும் உள்ளன.

“கை” யின் மதிப்பு[தொகு]

எல்லா வகை போக்கர் ஆட்டங்களுக்கும் “கை” சீட்டுகளை மதிப்பிடும் முறை பொதுவானதே. ஒரு “கை” யில் ஐந்து சீட்டுகள் இருக்கும். ஏஸ் (Ace) முதல், ராஜா (K), ராணி (Q)...10,9,8...4, 3, 2 என்று சீட்டுகளின் மதிப்பு குறைகிறது. பலத்தின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட “கை” களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:

பெயர் கை எடுத்துக்காட்டு
ஸ்ட்ரெய்ட் ஃப்ளஷ் ஒரே வகையில் (டைமண்ட்/ஸ்பேட்/க்ளப்/ ஆர்ட்டின்) வரிசையாக ஐந்து சீட்டுகள் Q♣ J♣10♣ 9♣ 8♣
ஃபோர் ஆஃப் அ கைன்ட் நான்கு வகையிலும் ஒரே எண் கொண்ட சீட்டுகள் உள்ள கை. 9♣ 9♠ 9♦ 9♥ J♥,
ஃபுல் ஹவுஸ் மூன்று வகைகளில் ஒரே எண் கொண்ட சீட்டுகளும், இரண்டு வகைகளில் ஒரே எண் கொண்ட சீட்டுகளும் உள்ள கை. 3♣ 3♠ 3♦ 6♣ 6♥
ஃபளஷ் ஒரே வகை வரிசையில்லாத ஐந்து சீட்டுகள் உள்ள கை Q♣ 10♣ 7♣ 6♣ 4♣
ஸ்ட்ரெய்ட் வெவ்வேறு வகைகளில் வரிசையாக ஐந்து சீட்டுகள் உள்ள கை Q♣ J♠ 10♠ 9♥ 8♥,
த்ரீ ஆஃப் எ கைன்ட் ஒரே எண்ணுள்ள மூன்று சீட்டுகள் உள்ள கை 2♦ 2♠ 2♣ K♠ 6♥
டூ பேர் ஒரே எண்ணுள்ள இரு சீட்டுகள், இரண்டு முறை உள்ள கை J♥ J♣ 4♣ 4♠ 9♥
ஒன் பேர் ஒரே எண்ணுள்ள இரு சீட்டுகள், ஒரே முறை உள்ள கை 4♥ 4♠ K♠ 10♦ 5♠
ஹை பேர் எந்த சீட்டும் வரிசையில் வராமல், எல்லா வகை சீட்டுகளும் உள்ள கை K♥ J♣ 8♣ 7♦ 3♠

கணினி நிரல்கள்[தொகு]

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் பல்வேறு கணினி போக்கர் பிளேயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2015 இல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில்,[3] ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, டெக்சாஸ் ஹோல்ட்'எம் அவர்களின் செபியஸ் போக்கர் போட்டை உருவாக்குவதன் மூலம் "அடிப்படையில் பலவீனமாகத் தீர்க்கப்பட்டது" என்று அறிவித்தது. செபியஸ் அதன் மோசமான எதிரிக்கு எதிராக சராசரியாக ஒரு விளையாட்டுக்கு அதிகபட்சமாக 0.001 பெரிய பிளைண்ட்களை இழக்க நேரிடும் என்று ஆசிரியர்கள் கூறினர், மேலும் இந்த உத்தி "உகந்த நிலைக்கு நெருக்கமாக" இருப்பதால் "மனிதனின் வாழ்நாள் முழுவதும் புள்ளியியல் முக்கியத்துவத்துடன் அதை முறியடிக்க முடியாது. போக்கர் விளையாடுவது".[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poker
என்பதின் ஊடகங்கள் உள்ளன.