பொள்ளாச்சி நசன்
பொள்ளாச்சி நசன் (பிறப்பு: செப்டம்பர் 15, 1952) என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியையும் நடத்தி வருகிறார். 2003 முதல் தமிழின் பல்வேறு கூறுகளுக்கான தமிழம்.வலை ( http://www.thamizham.net ) என்கிற இணையதளத்தினையும் நடத்தி வருகிறார்
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் சிதம்பரத்தில் பிறந்தார். சிதம்பரம் (தென்னாற்காடு மாவட்டம்) வரவரமுனி பாடசாலையில் தொடக்கக்கல்வியைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் 1974 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியருக்கான பட்டப்படிப்பை 1980 இல் முடித்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி ஏற்றார். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இதழியலில்
[தொகு]விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கினார். சிற்றிதழ்ச் செய்தி என்ற இருமாத இதழை ஆரம்பித்து தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார்.
- இவர் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இருமாதத்திற்கு ஒருமுறை வரும் இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
- 2003 ஆகஸ்டில் தமிழம் வலை ( www.thamizham.net ) தொடங்கினார்
- 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளியை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில் தொடங்கி நடத்தி வருகிறார்.
• 2009 இல் பணி ஓய்வு பெற்ற இவர், தான் சேசரித்த இதழ்களையும், நூல்களையும் படவடிவக்கோப்புகளாக்கி வருகிறார்.
• 50,000 க்கு மேற்பட்ட கோப்புகளைத் திரட்டி உள்ள இவர், உலகம் முழுவதும், படவடிவக்கோப்புகளாகி உள்ள இதழ்கள் மற்றும் நூல்களைப் பற்றிய குறிப்புகளையும் திரட்டி இணையத்தில் வரிசைப்படுத்தி உள்ளார். உலக அளவில் பாதுகாக்கப்பட்ட தமிழ் நூல்களுக்கான இந்தப் பட்டியல் இனி படவடிவக்கோப்புகளாக்குபவர்களுக்கு எவற்றை படவடிவக்கோப்புகளாக்க வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும். மேலும் விரும்புகிறவர்களுக்கு படவடிவக்கோப்புகளை ஆக்குவதற்கான பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
• இவரது வழிகாட்டுதலில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டிலுள்ள தமிழப்பள்ளிகளும் பயனடைந்து வருகின்றன.
• உலக மக்கள் அனைவரும் தமிழை எளிமையாகப் படிப்பதற்காக 32 அட்டைகளை உருவாக்கி அவற்றை 14 வகையான உலக மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் தமிழ் படிக்க இணையத்தில் வைத்துள்ளார்.
• திருக்குறளை எளிய முறையில் மாணவர்களும் மக்களும் உணர 303 எளிமையான குறட்பாக்களை வரிசைப்படுத்தி இணையத்தில் வைத்துள்ளார்.
• திருக்குறளை இசைவடிவில் கேட்கவும், தமிழின் பல்வேறு கூறுகளை இசைவடிவில் வெளிப்படுத்தவும் தமிழம்.பண்பலை தொடங்கித் தொடருகிறார்.