பொறியியல் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொறியியல் மேலாண்மை (Engineering management) என்பது மேலாண்மை முறையைப் பொறியியல் பணிகளுக்குப் பயன்படுத்தும் அறிவுப் புலமாகும். பொறியியல் மேலாண்மை தொழில்நுட்பச் சிக்கல் தீர்வுத் திறமையையும் மேலாண்மையின் நிறுவன, ஆட்சி, திட்டமிடல் திறமைகளையும் ஒருங்கிணைத்து சிக்கலான பொறியியல் தொழில்முனைவகத்தை இயக்கும் செயல்திறத்தை மேற்பார்வை செய்யும் பணியாகும். பொறியியல் மேலாண்மை முதுவர் பட்டமும் வணிகச் செயல்முறை முதுவர் பட்டமும் இணையானவையாகும். இது இளவல் பட்டம் பெற்ற தொழில்முறை வல்லுனருக்குப் பொறியியல் மேலாண்மைத் துறையில் பணியைப் பெற உதவும்.[1]

வரலாறு[தொகு]

சுட்டீவன்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் 1908 இலேயே ஒரு பொறியியல் மேலாண்மைத் துறை வணிகப் பொறியியல் எனும் பெயரில் அமைந்திருந்துள்ளது. இது பிறகு பொறியியல் இளவல் பட்டத்தை பொறியியல் மேலாண்மையில் வழங்கியுள்ளது. பிறகு இத்துறை அமைப்புகள், தொழில்முனைவகங்களின் பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் சிராக்கியூசு பல்கலைக்கழகம் தான் முதல் பொறியியல் மேலாண்மைப் பட்டத்தை 1957 இல் வழங்கியது.[2] பொறியியல் மேளாண்மைக்கென்றே ஒரு பல்கலைக்கழகத் துறையை மிசவுரி அறிவியல் தொழில்நுட்ப்ப் பல்கலைக்கழகம் 1967 இல் தொடங்கியது. இது முதலில் மிசவுரி சுரங்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு பிறகு மிசவுரி உரோலா பல்கலைக்கழகமானதாகும். மேற்கு மிச்சிகான் பல்கலைக்கழகம் 1959 இல் தொழிலக மேற்பார்வை தொடர்பான இளவல் பட்டத்தைத் தற்கால பொறியியல் மேலாண்மைக்கு முன்னோடியாக வழங்கியுள்ளது . மேலும் அது 1977 இல் பொருளாக்க ஆட்சியியலில் மூதறிவியல் பட்டத்தைத் தொடங்கி பிறகு பொறியியல் மேலாண்மையெனப் பெயரை மாற்றியது.

அமெரிக்காவுக்கு வெளியே செருமனியில் 1927 இல் முதல் பொறியியல் மேலாண்மையில் கவனம் குவிக்கும் துறையொன்று பெர்லினில் நிறுவப்பட்டது.[3] துருக்கி இசுத்தான்புல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேலாண்மை பொறியியல் துறை நிறுவப்பட்டது. இத்துறை மேலாண்மைப் பொறியியலில் பல இளவல், முதுவல் பட்டங்களை அளிக்கும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.[4] ஐக்கிய இராச்சியத்தில் வார்விக் பல்கலைக்கழகம் வார்விக் பொருளாக்கக் குழு சிறப்புத் துறையை 1980 இல் தொடங்கியது. இது பொறியியல் வணிக மேலாண்மையில் மூதறிவியல் பட்டத்தை அளிக்கிறது.[5]

மிச்சிகான் தொழில்நுடபப் பல்கலைக்கழகம் 2012 இலையுதிர் காலத்தில் பொறியியல் மேலாண்மைத் திட்டத்தை தனது வணிக, பொருளியல் பள்ளியில் தொடங்கியது.[6]

கனடாவில், நியூபவுண்டுலாந்து நினைவு பல்கலைக்கழகம் பொறியியல் மேலாண்மையில் முதுவல் பட்டத்தைத் தொடங்கியுள்ளது.[7]

பாக்கித்தானில், தாக்சிலாவில் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் க்ழகம், இலாகூரில் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கழகம், பாக்கித்தான் தேசிய அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NUST) ஆகியவை பொறியியல் மேலாண்மையில் முதுவல் பட்டமும் முனைவர் பட்டமும் வழங்குகின்றன. அறிவியல் தொழில்நுட்பப் பேரியல் பல்கலைக்கழகமும் (CUST), கராச்சியில் அமைந்த NED பொறியியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் குலாம் இழ்சாக் கான் பொறியியல்சார் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் பொறியியல் மேலாண்மையில் முது பொறியியல் பட்டமும் மூதறிவியல் பட்டமும் வழங்குகின்றன. இதன் ஒரு மாற்றாக தரமேலாண்மைப் பட்டமும் கூட வழங்கப்படுகிறது. COMSATS (CIIT) எனும் நிறுவனம் திட்ட மேலாண்மையில் மூதறிவியல் பட்டமொன்றை உள்நாட்டு, புலம்பெயர் பாக்கித்தானியருக்கு நிறுவனத்திலும் அதற்கு வெளியிலும் நடத்துகிறது.

இத்தாலியில், மிலானோ பல்தொழில்நுட்ப நிறுவனம்(Politecnico di Milano) மேலாண்மைப் பொறியியலில் இளவல் பட்டம் வழங்குகிறது.[8] பல அரசு, தனியார், அரசு நல்கை பல்கலைக்கழகங்கள் இதே போன்ற பட்டங்களை வழங்குகின்றன.[9]

உருசியாவில், 2014 ஆம் ஆண்டு முதலே, உருசிய பொருளியல், பொது ஆட்சியியல் அமைப்பின் முதன்மைக் கல்விக்கழகம் (RANEPA-ரனேபா) தனது பொறியியல் மேலாண்மைப் புலத்தில் பொறியியல் மேலாண்மையில் இளவல், முதுவல் பட்டங்களை அளித்து வருகிறது .

பிரான்சில், EPF இணையத்தளம் 2018 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் ஈராண்டு பொறியியல், மேலாண்மை பெரும்பாடத்தை ஐந்தாண்டு பொறியியல் முதுவல் மாணவருக்கு இறுதி இரண்டு ஆண்டுகளில் நடத்த முனைந்துள்ளது. இந்த இறுதி இரண்டு ஆண்டுகள் ஏற்கெனவே வேறு நிறுவனங்களில் பொறியியல் இளவல் பட்டம் பெற்றவருக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. [10]

புலப்பகுதிகள்[தொகு]

பொறியியல் மேலாண்மை ஒரு அகல்விரிவான புலமாகும். இது பல்வேறு தொழில்நுட்ப, மேலாண்மை தலைப்புகளில் பாடங்களை வழங்குகிறது. இதன் அரிய வள அமைப்பாக பொறியியல் மேலாண்மை அறிவு வட்டம் (EMBoK-எம்போக்) இயங்குகிறது.[11] இப்புலத்தில் பெரும்பாலும் கீழ்வரும் தலைப்புகள் அமைகின்றன. தலைமைதாங்கலும் நிறுவன மேலாண்மையும், செயல்முறைகள் மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, புதிய பொருள் உருவாக்க மேலாண்மை, அமைப்பு பொறியியல், தொழிலகப் பொறியியல், மேலாண்மை அறிவியல், பொறியியல் வடிவமைப்பு மேலாண்மை ஆகிய தலைப்புகள் அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MSEM vs. MBA - Gordon Institute". 2016-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "History - College of Engineering & Computer Science, Syracuse University". 2017-03-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Geschichte und Bedeutung - vwi.org". 2017-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-11 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Archived copy". 2012-11-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-19 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  5. "MSc Engineering Business Management - University of Warwick".
  6. "School of Business Audit Forms - The Registrar's Office".
  7. "Master of Engineering Management". 2015-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-24 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Studies in Management, Economics and Industrial Engineering". 2016-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-15 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Knowledge base of the Italian operating degrees: L08-Information Engineering, subclass named "Ingegneria Gestionale"". cestor.it (இத்தாலியன்). March 26, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  10. "EPF:Engineering Management Paris Campus". 2019-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-25 அன்று பார்க்கப்பட்டது.
  11. Shah, Hiral; Nowocin, Walter (October 2015). Guide to the engineering management body of knowledge. American Society of Mechanical Engineers (4th ). Huntsville, AL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780983100584. இணையக் கணினி நூலக மையம்:960965705. https://archive.org/details/guidetoengineeri0000unse. 

மேலும் படிக்க[தொகு]

  • Eric T-S. Pan|Pan, Eric T-S. Perpetual Business Machines: Principles of Success for Technical Professionals ISBN 0-9754480-0-5

வெளி இணைப்புகள்[தொகு]

கழகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியியல்_மேலாண்மை&oldid=3691546" இருந்து மீள்விக்கப்பட்டது