உள்ளடக்கத்துக்குச் செல்

பொருள் நோக்கு நிரலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினிகளுக்கு நிரலாக்கம் செய்வதில் பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) ஒரு இன்றியமையாத, பலரும் அறிந்த அணுகுமுறை ஆகும். ஒரு நிரல் என்பது ஆணைத்தொடர்கள், செயலிகள் ஆகியனவற்றின் தொகுப்பு என்று கருதாமல், அது பல பொருட்களின் தொகுப்பு என்று கருதி நிரலாக்கம் செய்வது பொருள் நோக்கு நிரலாக்கம் ஆகும். இறுதியில், அந்த நிரலே ஒரு பொருளாகக் கருதப்படும். இவ்வாறு, நிரல்களை பொருள்களாகவும் அவற்றுக்கிடையான தொடர்பாடலாகவும் பொருள் சார் நிரலாக்கம் அணுகுகின்றது. C++, C#, Java, Python, Perl, PHP போன்ற நிரல்மொழிகள் இவ்வணுகுமுறையில் அமைந்த நிரல் மொழிகளே. பொருள் நோக்கு நிரலாக்கம் தரவுகளையும் நிரலையும் பொருள் என்ற கருத்தாக்கத்தின் வழி ஒன்றிணைக்கிறது. ஒரு பொருள் நிலையையும்(தரவு) தன்மையையும்(நிரல்) கொண்டுள்ளது. கணிப்பொறி பொருளை சில நேரங்களில் பெளதீக உலகின் பொருட்களோடு ஒப்பிடலாம்.

மேலதிக வாசிப்பு

[தொகு]