பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி
பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி Bommireddy Sundara Rami Reddy | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1978–1983 | |
முன்னையவர் | காஞ்சார்லா சிறீயரி நாயுடு |
பின்னவர் | அனம் வெங்கட ரெட்டி |
தொகுதி | ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1985–1994 | |
முன்னையவர் | அனம் வெங்கட ரெட்டி |
பின்னவர் | கொம்மி இலட்சுமய்யா நாயுடு |
தொகுதி | ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 அக்டோபர் 1935 |
இறப்பு | 6 பெப்ரவரி 2020 | (அகவை 84)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி (Bommireddy Sundara Rami Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மருத்துவராகவும் அறியப்படுகிறார். பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுயசரிதை
[தொகு]ராமி ரெட்டி 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தார் [1] சென்னையில் மருத்துவத்தில் எம்பிபிஎசு பட்டம் பெற்றார். பின்னர், அரசுப் பணியில் சேர்ந்தார். 1970 ஆம் ஆண்டில் தனது மருத்துவமனையைத் திறந்தார்.
ராமி ரெட்டி 1978 ஆம் ஆண்டு ஆத்மகூரில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] 1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அந்தத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] [4] 1985 தேர்தலில் வெங்கையா நாயுடுவை தோற்கடித்தார். [5] இவரது மகன் பொம்மிரெட்டி ராகவேந்திரா ரெட்டி ஆந்திர பிரதேச சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். [6]
ராமி ரெட்டி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று தனது 84 வயதில் இறந்தார் [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Former MLA and Congress leader Sundara Rami Reddy passes away". 7 February 2020. https://www.thehansindia.com/andhra-pradesh/former-mla-and-congress-leader-sundara-rami-reddy-passes-away-603338. பார்த்த நாள்: 7 February 2020.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1978". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1985". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1989". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "List Of Winning Candidates". பார்க்கப்பட்ட நாள் 7 February 2020.
- ↑ "Bommireddy Raghvendra Reddy (Winner)". பார்க்கப்பட்ட நாள் 7 February 2020.