உள்ளடக்கத்துக்குச் செல்

பொன். சிவபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொன் சிவபாலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொன் சிவபாலன்
யாழ்ப்பாண நகர முதல்வர்
பதவியில்
29 சூன் 1998 – 11 செப்டம்பர் 1998
முன்னையவர்சரோஜினி யோகேஸ்வரன்
பின்னவர்எவருமில்லை
யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1952
இறப்பு11 செப்டம்பர் 1998 (அகவை 45–46)
யாழ்ப்பாணம், இலங்கை
காரணம் of deathகிளைமோர் குண்டுத்தாக்குதல்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி

பொன். சிவபாலன் (1952[1] – 11 செப்டம்பர் 1998) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும் ஆவார்.

சிவபாலன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். யாழ்ப்பாண முதல்வராக இருந்த சரோஜினி யோகேஸ்வரன் 1998 மே 17 இல் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பொன். சிவபாலன் யாழ்ப்பாண முதல்வரானார். 1998 செப்டம்பர் 11 இல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் பொன் சிவபாலன் கொல்லப்பட்டார். இவருடன் இலங்கைத் தரைப்படையின் யாழ்ப்பாண நகரத் தளபதி சுசாந்த மெண்டிஸ், மற்றும் கப்டன் இராமநாயக்க, யாழ்ப்பாண நகரின் மூத்த காவல்துறை அதிகாரி சந்திரா பெரேரா உட்பட ஆறு இராணுவ, காவல்துறை அதிகாரிகளும், ஐந்து பொது மக்களும் கொல்லப்பட்டனர்.[2][3][4] இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டது. சிவபாலனின் இறப்பிற்குப் பின்னர், முதல்வர் பதவி அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு அதன் நிருவாகம் நேரடியாக அரச அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. TamilNet: Mayor's funeral to be in Jaffna
  2. "Principal Ceylon Events, 1998". Ferguson's Ceylon Directory, Colombo. 1999. 
  3. FROM OPERATION LEAP FORWARD TO PON SIVAPALAN, எஸ். சதானந்தன்
  4. Eighteen killed in Jaffna blast, தமிழ்நெட், 11 செப்டம்பர் 1998

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._சிவபாலன்&oldid=3990689" இலிருந்து மீள்விக்கப்பட்டது