பொன். ஜெயசீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன். ஜெயசீலன்
கூடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபதுளை, இலங்கை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

பொன். ஜெயசீலன் (Pon Jayaseelan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.[1] நீலகிரி மாவட்டம் நடுகாணியைச் சார்ந்த இவர், கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பயின்று சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்.[2] 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pon.Jayaseelan(AIADMK):Constituency- GUDALUR (SC)(THE NILGIRIS) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "Gudalur Election Result 2021 Live Updates: Pon Jayaseelan of AIADMK Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "Pon Jayaseelan | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  4. https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/03064420/-Candidate-Pon-Jayaseelan-wins.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._ஜெயசீலன்&oldid=3378952" இலிருந்து மீள்விக்கப்பட்டது