பொது ஊழி
பொது ஊழி (Common Era), பொ.ஊ. (CE) என்பது அனோ டொமினிக்கு (AD) மாற்றான சொல். இது பொதுக் காலம் அல்லது பொது ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. அனொ டொமினி, 6-ஆம் நூற்றாண்டில் தியோனீசியசு எக்சிகசு என்ற கிறித்தவத் துறவியால் அறிமுகப்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக கி.பி. 2011 என்பதைப் பொது ஊழிச் சொல்லாடலில் "பொ.ஊ. 2011" அல்லது "2011 பொ.ஊ." என்று எழுதப்படுகிறது.[1][2][not in citation given] இது "பொது ஆண்டுக்குப் பின்" (பொ.பி.) என்றும் "பொது ஆண்டு" (பொ.ஆ.) என்றும் "பொதுக் காலம்" (பொ.கா.) என்றும் வழங்கப்படுகிறது.
பொது ஊழிக்கு முற்பட்ட ஆண்டுகள் பொது ஊழிக்கு முன் (பொ.ஊ.மு.) என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கி.மு. 500 (500 BC) என்பது பொது ஊழிச் சொல்லாடலில் "பொ.ஊ.மு. 500" அல்லது "500 பொ.ஊ.மு." (500 BCE) என்றாகிறது. இது "பொது ஆண்டுக்குப் முன்" (பொ.மு.) என்றும் "பொது ஆண்டுக்கு முன்" (பொ.ஆ.மு.) என்றும் "பொதுக் காலத்திற்கு முன்" (பொ.கா.மு.) என்றும் வழங்கப்படுகிறது.
பொது ஊழி அல்லது பொதுவருடம் என்பது நடுநிலை விரும்பும் பல ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வெளிப்படையாக "கிறிஸ்து" மற்றும் "கடவுள்" (Domini) போன்ற மதத் தலைப்புகளை பயன்படுத்தவில்லை.
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "Anno Domini". Merriam Webster Online Dictionary. (2003). Merriam-Webster. “Etymology: Medieval Latin, in the year of the Lord”
- ↑ "Controversy over the use of the "CE/BCE" and "AD/BC" dating notation/". Ontario Consultants on Religious Tolerance. Archived from the original on 2011-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-11-12.