பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
10387-40-3
பண்புகள்
C2H3KOS
வாய்ப்பாட்டு எடை 114.21
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு (Potassium thioacetate) என்பது C2H3KOS என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கரிம கந்தகச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திண்மமாக உள்ள இச்சேர்மம் தயோ அசிட்டேடு எசுத்தர்களையும் பிற வழிப்பொருட்களையும் தயாரிப்பதற்குரிய வினைப்பொருளாகப் பயன்படுகிறது [1] .

தயாரிப்பும் வினைகளும்[தொகு]

அசிட்டைல் குளோரைடு மற்றும் பொட்டாசியம் ஐதரசன் சல்பைடு ஆகிய சேர்மங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு தயாரிக்க முடியும்.

CH3COCl + 2 KSH → KCl + CH3COSK + H2S

தயோ அசிட்டிக் அமிலத்துடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து நடுநிலையாக்கம் செய்வதாலும் பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு தயாரிக்க முடியும்.

CH3COSK + RX → CH3COSR + KX (X = halide)

பொட்டாசியம் தயோ அசிட்டேட்டு, ஆல்க்கைலேற்றும் முகவர்களுடன் வினைபுரிந்து தயோ அசிட்டேட்டு எசுத்தர்களைக் கொடுக்கிறது என்பது பொதுப் பயன்பாடாகும்.

CH3COSR + H2O → CH3CO2H + RSH

மேற்கோள்கள்[தொகு]

  1. Zongjun Qiao and Xuefeng Jiang "Potassium Thioacetate" e-EROS Encyclopedia Of Reagents For Organic Synthesis, 2014. எஆசு:10.1002/047084289X.rn01737