பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III)
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
14323-44-5 | |
ChemSpider | 67168471 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23662692 |
| |
பண்புகள் | |
KICl4 | |
வாய்ப்பாட்டு எடை | 307.80 g·mol−1 |
உருகுநிலை | 116 °C (241 °F; 389 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) (Potassium tetrachloroiodate(III)) என்பது KICl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் ஒற்றைநீரேற்றுச் சேர்மம் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் P21/n என்ற இடக்குழுவில் மஞ்சள் நிறத்தில் படிகங்களாக உள்ளது.[1][2]
தயாரிப்பு
[தொகு]அயோடின், பொட்டாசியம் குளோரேட்டு மற்றும் 6 மோல்/லி ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் கரைக்கப்பட்ட 1.5 மோல்/லி பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்து ஒடுக்குதல் வினை, வடிகட்டுதல், வெற்றிட உலர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) சேர்மத்தைப் பெறலாம். இடற்கான வினை::[3][4]
- 2 KClO3 + I2 <-> 2 KIO3 + Cl2
- KIO3 + 6 HCl <-> KICl4 + Cl2 + 3 H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ejima, T.; de Boer, J. L.; Vos, A. (10 April 1963). "The refinement of the crystal structure of KICl4.H2O". Acta Crystallographica 16 (4): 243–247. doi:10.1107/S0365110X63000682. Bibcode: 1963AcCry..16..243E.
- ↑ Derakhshan, Behzad M.; Finch, Arthur; Gates, Peter N.; Page, Terence H. (September 1979). "Thermochemistry of polyhalides. IV. Anhydrous and hydrated potassium tetrachloroiodates". Thermochimica Acta 32 (1–2): 317–320. doi:10.1016/0040-6031(79)85120-5. Bibcode: 1979TcAc...32..317D.
- ↑ "Science made alive: Chemistry/Compounds". woelen.homescience.net.
- ↑ "Synthesis of Potassium Tetrachloroidate". prepchem.com.